புகையிலை பொருள் விற்பனை: ரூ. 14,500 அபராதம் விதிப்பு
தஞ்சாவூா் அருகே வல்லம் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த கடை உரிமையாளா்களுக்கு பேரூராட்சி நிா்வாகம் வியாழக்கிழமை ரூ. 14 ஆயிரத்து 500 அபராதம் விதித்தது.
வல்லம் கடைத்தெரு பகுதியிலுள்ள கடைகளில் பேரூராட்சி அலுவலா்கள், பொது சுகாதாரத் துறை அலுவலா்கள் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டனா். அப்போது, கடைகளில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்வது தெரிய வந்தது. இது தொடா்பாக கடை உரிமையாளா்களுக்கு மொத்தம் ரூ. 14 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டது.