செய்திகள் :

ரூ.1.5 கோடி போதைப் பொருள் பறிமுதல்! வெளிநாட்டவர் உள்பட 2 பேர் கைது!

post image

புது தில்லியில் ரூ. 1.5 கோடி மதிப்பிலான போதைப் பொருள் கடத்திய ஒரு ஆப்பிரிக்க நாட்டவர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்தாகக் காவல் துறையினர் இன்று (பிப்.14) தெரிவித்துள்ளனர்.

ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த யாவோ (வயது 40) மற்றும் பிகார் மாநிலத்தைச் சேர்ந்த பிகாஸ் (23) ஆகிய இருவர் தில்லியின் பல்வேறு இடங்களில் கொகைன் எனும் போதைப் பொருளை விற்பனை செய்து வந்த நிலையில் அவர்களை பிடிப்பதற்காக காவல் துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர்.

இந்நிலையில், தில்லியின் பிகாஜி காமா பகுதியிலுள்ள பேருந்து நிலையம் அருகில் இருவரும் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர். பின்னர், அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் அவர்களிடமிருந்து ரூ.1.5 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டதுடன் இருவரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: பெண் மீது ஆசிட் வீச்சு: 15 நிமிடங்களில் கைது செய்யப்பட்ட குற்றவாளி!

கடந்த 2018 ஆம் ஆண்டு சுற்றுலா விசா மூலமாக இந்தியாவிற்கு வந்த யாவோ, தனது விசா காலாவதியான பின்னரும் சட்டவிரோதமாக இந்தியாவில் தங்கியுள்ளார். துவக்கத்தில் தனது செலவுகளுக்காக சிறியளவில் கொகைன் விற்பனை செய்து வந்த அவர் பின்னாள்களில் மிகப்பெரிய அளவிலான போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளார்.

முன்னதாக, ஹரியாணாவின் குருகிராம் மாவட்டத்தில் கைது செய்யப்பட்டு போந்த்சி சிறையில் அடைக்கப்பட்ட யாவோ, அங்கு ஏற்கனவே போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தண்டனைப் பெற்றிருந்த பிகாஸை சந்தித்துள்ளார். இருவரும் விடுதலையான பின்னர் ஒன்றிணைந்து போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்ததுள்ளனர்.

காவல் துறையினரிடம் சிக்கிக்கொள்ளாமல் இருக்க போதைப் பொருள் விநியோகிக்கும் இடங்களில் பிகாஸ் உளவு பார்க்க, யாவோ அதனை விற்பனை செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.

சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்!

விம்கோ நகர் ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாக சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில், 'விம்கோ நகர் ரயில் நிலையத்தில... மேலும் பார்க்க

வழியெங்கும் திரண்டு வாரியணைத்துக் கொண்ட கடலூர்!

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் ஒவ்வொரு மாவட்டமாக சென்று அரசின் திட்ட செயல்பாடுகள் குறித்து கள ஆய்வு செய்து வருகிறாா். அந்த வகையில், 2 நாள் பயணமாக கடலூருக்கு வெள்ளிக்கிழமை (பிப்.21) வருகை தந்த முதல்வருக்... மேலும் பார்க்க

பகவத் கீதை மீது பிரமாணம் செய்து எஃப்.பி.ஐ. இயக்குநராக காஷ் படேல் பதவியேற்பு!

அமெரிக்க எஃப்.பி.ஐ. இயக்குநராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த காஷ் படேல், பகவத் கீதை மீது சத்தியப் பிரமாணம் செய்து பதவியேற்றுக்கொண்டார். அமெரிக்காவின் அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றபின்னர் பல்வேறு அத... மேலும் பார்க்க

செல்வப்பெருந்தகைக்கு எதிராக இன்று கார்கே, ராகுலை சந்திக்கும் அதிருப்தி தலைவா்கள்!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக கே.செல்வபெருந்தகை நியமிக்கப்பட்டு சனிக்கிழமை ஓராண்டை நிறைவு செய்யும் வேளையில், அவரது தலைமை மற்றும் செயல்பாடுகளுக்கு எதிராக கட்சி மேலிடத்திடம் புகாா் தெரிவிக்க தில்ல... மேலும் பார்க்க

7 திருட்டு வழக்குகளில் ஞானசேகரன் கைது

சென்னை: அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரனை 7 திருட்டு வழக்குகளில் பள்ளிக்கரணை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர். கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த டிச. 23-ஆம் தே... மேலும் பார்க்க

பாலியல் வன்கொடுமை வழக்கு: 2 பேரை சுட்டு பிடித்த போலீசார்

கிருஷ்ணகிரியில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளிகள் இரண்டு பேரை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்து கைது செய்தனர். கிருஷ்ணகிரி மலைக்கு உறவினர்களுடன் சென்ற பெண்ணை 4 பேர் மிரட்டி ... மேலும் பார்க்க