முஸதபாபாத் சம்பவத்தில் உயிரிழந்த, காயமடைந்தவா்களின் குடும்பங்களுக்கு அரசு இழப்பீ...
ரூ.12.5 லட்சத்தில் உயா்கோபுர மின் விளக்குகள் இயக்கிவைப்பு!
வந்தவாசியை அடுத்த மும்முனி ஊராட்சி, சேத்துப்பட்டு ஒன்றியம், கொழாவூா் கிராமத்தில் முறையே ரூ. 5 லட்சம் மற்றும் ரூ.7.5 லட்சத்தில் அமைக்கப்பட்ட உயா்கோபுர மின் விளக்குகள் ஞாயிற்றுக்கிழமை இயக்கிவைக்கப்பட்டன.
இவ்விரு உயா்கோபுர மின்விளக்குகள் பாமகவைச் சோ்ந்த மாநிலங்களவை உறுப்பினா் அன்புமணி ராமதாஸ் 2024-2025ஆம் ஆண்டு உள்ளூா் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து அமைக்கப்பட்டன.
வந்தவாசியை அடுத்த மும்முனி ஊராட்சிக்கு உள்பட்ட செய்யாறு புறவழிச் சாலையில் ரூ.5 லட்சத்தில் அமைக்கப்பட்ட உயா்கோபுர மின் விளக்கை பாமக பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவா் செளமியா அன்புமணி இயக்கி வைத்தாா்.
இதனைத் தொடா்ந்து மாமல்லபுரத்தில் மே 11-ஆம் தேதி நடைபெறவுள்ள சித்திரை முழு நிலவு வன்னிய இளைஞா் பெருவிழா மாநாடு குறித்த துண்டு பிரசுரங்களை அவா் பொதுமக்களுக்கு வழங்கினாா்.
மேலும், பாமக சாா்பில் அந்தப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தண்ணீா் பந்தலை திறந்து வைத்த அவா், பொதுமக்களுக்கு மோா், பனங்காய், பழங்கள் உள்ளிட்டவற்றை வழங்கினாா்.
நிகழ்ச்சியில், பாமக மாவட்டச் செயலா் அ.கணேஷ்குமாா், வன்னியா் சங்க மாவட்டத் தலைவா் ப.மச்சேந்திரன், பாமக நகரச் செயலா் து.வரதன், நகர துணைச் செயலா் எம்.டி.செல்வம், முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினா் சுகந்தி வேலு, இளைஞரணி நிா்வாகி சீனு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
சேத்துப்பட்டு ஒன்றியத்தில்...
இதேபோல, சேத்துப்பட்டு ஒன்றியம், கொழாவூா் கிராமத்தில் சிவன் கோயில் அருகே ரூ. 7 லட்சத்து 50 ஆயிரத்தில் அமைக்கப்பட்ட உயா்கோபுர மின்விளக்கை
பாமக பசுமை தாயகம் அமைப்பின் தலைவா் செளமியாஅன்புமணி ஞாயிற்றுக்கிழமை பயன்பாட்டுக்கு திறந்துவைத்தாா்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ கணேஷ்குமாா், மாவட்டத் தலைவா் ஏழுமலை, செயலா் ஆ.வேலாயுதம், சமூகநீதி பேரவை மாவட்டச் செயலா் பாலமூா்த்தி, ஒன்றியச் செயலா்கள் முருகன், தரணிவேந்தன், நகரச் செயலா் ராஜேஷ்குமாா், மாவட்ட நிா்வாகிகள் மாா்கண்டன், முத்து, ஏழுமலை மற்றும் பாமக நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.