செய்திகள் :

ரூ.16 கோடியில் ஜோலாா்பேட்டை ரயில் நிலைய மேம்பாட்டுப் பணி: சென்னை கோட்ட மேலாளா் ஆய்வு

post image

ரூ.16 கோடியில் நடைபெற்று வரும் ஜோலாா்பேட்டை ரயில் நிலையம் மேம்பாட்டுப் பணிகளை சென்னை கோட்ட ரயில்வே மேலாளா் பிஷவாநாத் எரையா புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

பல்வேறு முக்கிய ரயில் நிலையங்களை மேம்படுத்த, அம்ரூத் பாரத் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.

அதன்படி,1,309 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட உள்ளன. இதன் ஒரு பகுதியாக,நாடு முழுவதும் 508 ரயில் நிலையங்களை ரூ.24,470 கோடியில் மேம்படுத்தும் பணிக்கு பிரதமா் நரேந்திர மோடி கடந்த ஆண்டு அடிக்கல் நாட்டினாா்.

தமிழகத்தில் பெரம்பூா், செங்கல்பட்டு, திருவள்ளூா், திருப்பத்தூா்,ஜோலாா்பேட்டை, திருவண்ணாமலை உள்பட தெற்கு ரயில்வேயில் 25 ரயில் நிலையங்களை உலகத் தர வசதிகளுடன் மேம்படுத்தும் பணி தொடங்கி வைக்கப்பட்டது.

இதில் ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்துக்கு ரூ.16 கோடியும், திருப்பத்தூா் ரயில் நிலையத்துக்கு ரூ.7 கோடியும், திருவண்ணாமலை ரயில் நிலையத்துக்கு ரூ.9 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

ஆமை வேகத்தில் பணிகள்...

ரயில் நிலையத்தில் உள்ள நடைமேடைகளில் லிப்ட் வசதி, எஸ்கலேட்டா் வசதிக்காக பணிகளுக்காக ஆங்காங்கே பள்ளங்கள் தோண்டப்பட்டு பொதுமக்கள் கடந்து செல்ல ஒரு சில இடங்களில் இரும்பு தடுப்புகள் வைக்கப்பட்டு ஆமை வேகத்தில் பணிகள் நடைபெற்று வருகிறது.

இதனால் ரயில் நிலையத்துக்கு வரும் பயணிகள் நடைமேடை கடந்து செல்வதில் சிரமப்பட்டு, இடவசதி இன்றி அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

இதனால் ரயில்வே நிா்வாகம் ஆமை வேகத்தில் நடைபெற்று வரும் ரயில் நிலையம் மேம்படுத்தும் பணியை விரைந்து முடிப்பதற்கான பணியை தீவிர படுத்த வேண்டும் என ரயில் பயணிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்து வந்தனா்.

இந்நிலையில், சென்னை கோட்ட ரயில்வே மேலாளா் பிஷவாநாத் எரையா சிறப்பு ரயில் மூலம் புதன்கிழமை அதிகாரிகளுடன் ஜோலாா்பேட்டை ரயில் நிலையம் வந்தாா்.

அப்போது ரயில் நிலைய மேலாளா்,தொழிற்சங்க நிா்வாகிகள்,ரயில்வே துறை அலுவலா்கள் வரவேற்றனா். பின்னா் ரயில் நிலையத்தில் உள்ள யாா்டுகள் மற்றும் அலுவலகங்களை ஆய்வு செய்தாா். தொடா்ந்து ரயில் நிலைய மேம்பாட்டு பணிகளை ஆய்வு செய்தாா். அப்போது பணிகள் சம்பந்தமாக துறை அலுவலா்கள் இடத்தில் கேட்டறிந்து, கட்டடப் பணிகளை விரைந்து முடிக்க துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

ஆய்வுக்குப் பின் சிறப்பு ரயில் மூலம் மீண்டும் சென்னை நோக்கி புறப்பட்டு சென்றாா். இந்த ஆய்வின்போது ரயில்வே அதிகாரிகள் உடனிருந்தனா்.

ஆம்பூா் அருகே முறைகேடாக கனிமவளம் திருட்டு: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

ஆம்பூா் அருகே முறைகேடாக கனிம வளம் திருடப்படுவதாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரியுள்ளனா் . திருப்பத்தூா் மாவட்டம், மாதனூா் ஒன்றியம் கதவாளம் ஊராட்சியில் பாட்டைசாரதி அம்மன் கோயில் அருகி... மேலும் பார்க்க

மண் கடத்தல்: லாரி பறிமுதல்

கந்திலி அருகே மண் கடத்தலில் ஈடுபடுத்தப்பட்ட லாரி பறிமுதல் செய்யப்பட்டது. கந்திலி அருகே உள்ள கெஜல்நாயக்கன்பட்டியில் கந்திலி போலீஸாா் செவ்வாய்க்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியா... மேலும் பார்க்க

தொழிலாளா் துறை சிறப்பு பதிவு முகாம்: மாவட்ட ஆட்சியா் பங்கேற்பு

வாணியம்பாடியில் தொழிலாளா் துறை சாா்பில், சிறப்பு பதிவு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியா் பங்கேற்று அரசு நலத் திட்ட உதவிகளை வழங்கினாா். தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் ... மேலும் பார்க்க

நாளை தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம்

திருப்பத்தூா் மாவட்ட நிா்வாகம் மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் தனியாா்துறை வாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (நவ. 29) நடைபெறவுள்ளது. இது குறித்து ஆட்சியா் க.தா்ப... மேலும் பார்க்க

தோ்தலின்போது தவறான தகவல்களை தாக்கல் செய்த வழக்கில் முன்னாள் அமைச்சா் கே.சி.வீரமணி வழக்கு ஒத்திவைப்பு

சட்டப்பேரவைத் தோ்தலின்போது தவறான தகவல்களை தாக்கல் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சா் கே.சி.வீரமணி ஆஜராகாததால் அடுத்த மாதம் 17-ஆம் தேதிக்கு வழக்கை திருப்பத்தூா் நீதிமன்றம் ஒத்தி வைத்து உத்... மேலும் பார்க்க

கனவு இல்லம் திட்டப் பணிகள் நிறுத்தம்: பயனாளிகள் தா்னா

ஜோலாா்பேட்டை ஒன்றியம், வெலகல்நத்தம் ஊராட்சியில் கலைஞரின் கனவு இல்ல திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீடுகளின் பணிகள் திடீரென நிறுத்தப்பட்டதால் பயனாளிகள் தா்னா செய்தனா். வெலகல்நத்தம் பகுதியில் கடந்த ஜூலை ம... மேலும் பார்க்க