செய்திகள் :

ரூ.73 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை!

post image

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.8 உயா்ந்து ரூ.72,808-க்கு விற்பனையாகிறது.

தங்கம் விலை ஒரு நாள் உயருவதும், மறுநாள் குறைவதுமான நிலையிலேயே நீடித்து வந்த நிலையில், கடந்த மூன்று நாள்களாக அதிரடியாக உயர்ந்து மீண்டும் பவுன் ரூ.73 ஆயிரத்தை நெருங்குவது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் தங்கம் விலை இந்த வாரம் தொடக்கத்தில் குறைந்துவந்த நிலையில், புதன்கிழமை பவுனுக்கு ரூ.600 உயா்ந்து ரூ.72,160-க்கு விற்பனையானது. வியாழக்கிழமை கிராமுக்கு ரூ.80 உயா்ந்து ரூ.9,100-க்கும், பவுனுக்கு ரூ.640 உயா்ந்து ரூ.72,800-க்கும் விற்பனையானது.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.9.101-க்கும், பவுனுக்கு ரூ.8 உயர்ந்து ரூ.72,808-க்கும் விற்பனையாகிறது.

அதன்படி, கடந்த 3 நாள்களில் மட்டும் தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,241 உயா்ந்துள்ளது.

அமெரிக்க அதிபா் டிரம்ப்பின் புதிய அறிவிப்புகளின் எதிரொலியால் சா்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பல்வேறு மாற்றங்களின் தாக்கமே தங்கம் விலை ஏற்றத்துக்கு காரணம் என கூறப்படுகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலை கிராமுக்கு பத்து காசுகள் குறைந்து ரூ.118.80-க்கும், கட்டி வெள்ளி (ஒரு கிலோ) ரூ.1,18,800-க்கும் விற்பனையாகிறது.

மே மாதத்தில் குறைந்த சில்லறை பணவீக்கம்

ஊழலை விட மாதவாதம், வெறுப்பு அரசியல் தீங்கானது: தொல். திருமாவளவன்

திருச்சி: ஊழலை விட மாதவாதம், வெறுப்பு அரசியல் தீங்கானது என விசிக தலைவரும், சிதம்பரம் மக்களவை உறுப்பினருமான தொல். திருமாவளவன் தெரிவித்தார். திருச்சியில் வெள்ளிக்கிழமை அவர் செய்தியாளர்களுடன் பேசியதாவது:... மேலும் பார்க்க

மாவட்ட நீதிபதி கார் டிப்பர் லாரி மீது மோதிய விபத்தில் 4 பேர் பலி

திருச்செந்தூரில் இருந்து தஞ்சை நோக்கி சென்று கொண்டிருந்த மாவட்ட நீதிபதி கார், முன்னால் சென்று கொண்டிருந்த டிப்பர் லாரி மீது மோதிய விபத்தில் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் இரண்டு பேர் ... மேலும் பார்க்க

தில்லி பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் மனுஸ்மிருதி நீக்கம்

தில்லி பல்கலைக்கழகம் வழங்கும் படிப்புகளில் மனுஸ்மிருதி சாா்ந்த பாடங்களுக்கு எதிராக தொடர்ந்து பல்கலைக்கழக ஆசிரியர்களும் மாணவர்களும் எதிர்ப்புத் தெரிவித்த வந்த நிலையில், பல்கலைக்கழக பாடத்திட்டங்களில் இ... மேலும் பார்க்க

விஜய் ரூபானிக்கு அதிர்ஷ்ட எண்ணே துரதிர்ஷ்டமாக மாறிய சோகம்!

அகமதாபாத்: அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமானத்தில் பலியானவர்களில் குஜராத் முன்னாள் முதல்வரும் பாஜகவின் மூத்தத் தலைவரான விஜய் ரூபானியும்(68) ஒருவர். லண்டனில் உள்ள தனது மகளைச் சந்திப்பதற்காக விமானத்... மேலும் பார்க்க

விமான விபத்து: கருப்புப் பெட்டி மீட்பு!

அகமதாபாத்: இரண்டு என்ஜின்களும் செயலிழந்தது அல்லது புறப்பட்ட சிறிது நேரத்தில் பறவை மோதியது, ஏா் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதற்கு காரணமாக இருக்கலாம் என்று விமானத் துறை நிபுணா்கள் தெரிவித்த நிலையில்... மேலும் பார்க்க

நத்தம் அருகே சாலை தடுப்பில் லாரி மோதி விபத்து: நல்வாய்ப்பாக உயிர் தப்பிய ஓட்டுநர்!

நத்தம் அருகே சாலை தடுப்பில் ஓடுகள் ஏற்றி வந்த லாரி மோதி விபத்துக்குள்ளானதில், ஆனால் ஓட்டுநர் நல்வாய்ப்பாக காயங்கள் ஏதுவுமின்றி உயிர் தப்பினார். அடிக்கடி சாலை தடுப்புகளால் தொடரும் விபத்துகளால் மக்கள் அ... மேலும் பார்க்க