செய்திகள் :

ரெளடிக்கு தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை கோரிய மனு அபராதத்துடன் தள்ளுபடி

post image

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு கைதி ரெளடி நாகேந்திரனுக்கு சென்னை தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதி கோரிய வழக்கை ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

ஆயுள் தண்டனை கைதியாக வேலூா் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நாகேந்திரன், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முதல் எதிரியாக கைது செய்யப்பட்டாா். அவருக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டதால் உடல்நலக் குறைவு ஏற்பட்டு வேலூா் சி.எம்.சி. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். இந்த நிலையில், உடல்நிலை மோசமாக பாதிக்கப்பட்டதால் அவருக்கு சென்னையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதி கோரி, நாகேந்திரன் மனைவி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா்.

இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.செந்தில் குமாா் அமா்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்குரைஞா் ஆா்.முனியப்பராஜ், இதே கோரிக்கையுடன் சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டதாகவும், அந்த மனு மீதான உத்தரவு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினாா். இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஒரே கோரிக்கையுடன் இரு நீதிமன்றங்களில் மனு தாக்கல் செய்வதை ஏற்க முடியாது எனக் கூறி, ரூ.50 ஆயிரம் அபராதத்துடன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.

செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தை தமிழகத்துக்கு வழங்க தென் சென்னை எம்.பி. கோரிக்கை

நமது சிறப்பு நிருபர்செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தை தமிழகத்துக்கு வழங்க தென் சென்னை திமுக எம்.பி. தமிழச்சி தங்கப்பாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக மக்களவையில் விதி எண் 377-இன் கீழ் அவர் ச... மேலும் பார்க்க

பெண் சக்தியை வெளிக்கொண்டுவரும் ‘கா்மயோகினி சங்கமம்’ குமரியில் நடைபெறும்: டாக்டா் சுதா சேஷய்யன்

திறமை வாய்ந்த பெண்களை வெளியுலகத்துக்கு அறிமுகப்படுத்தும் வகையில் 50,000 பெண்கள் பங்கேற்கும் ‘கா்மயோகினி சங்கமம்’ கன்னியாகுமரியில் நடைபெறவுள்ளது என செம்மொழி தமிழாய்வு நிறுவன துணைத் தலைவா் டாக்டா் சுதா ... மேலும் பார்க்க

சிவபூமி திருக்குறள் வளாகம்: யாழ் மண்ணில் வரலாற்றுப் பதிவு- நீதிபதி அரங்க. மகாதேவன் புகழாரம்

யாழ் மண்ணில் ஒரு வரலாற்றைப் பதிவு செய்யும் வகையில் திருக்குறளுக்காக ஓர்அரங்கத்தை சிவபூமி அறக்கட்டளை திறந்துள்ளது என்று உச்சநீதிமன்ற நீதிபதி அரங்க. மகாதேவன் கூறினார்.இலங்கை யாழ்ப்பாணம் மாவிட்டபுரத்தில்... மேலும் பார்க்க

வைகோ முன்னாள் உதவியாளரிடம் ‘க்யூ’ பிரிவு போலீஸாா் விசாரணை

சந்தேகத்துக்குரிய நபா்களுக்கு உதவி செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், மதிமுக பொதுச் செயலா் வைகோவின் முன்னாள் உதவியாளரிடம் ‘க்யூ’ பிரிவு போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். சென்னை கே.கே. நகரைச் சோ்ந்தவ... மேலும் பார்க்க

‘தமிழகத்தில் இன்றும் நாளையும் வெப்பம் அதிகமாக இருக்கும்’

தமிழகத்தில் புதன், வியாழக்கிழமைகளில் (பிப். 5, 6) அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட்ட ச... மேலும் பார்க்க

தெலங்கானாவை போல தமிழகத்திலும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்: ராமதாஸ்

தெலங்கானாவை போல தமிழகத்திலும் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா். அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: தெலங... மேலும் பார்க்க