செய்திகள் :

லெபனான் - சிரியா இடையே எல்லை வரையறை ஒப்பந்தம்!

post image

லெபனான் மற்றும் சிரியா இடையே எல்லை வரையறை ஒப்பந்தம் கையெழுத்தானது.

லெபனான் மற்றும் சிரியா ஆகிய இரு நாடுகளுக்கு இடையே எல்லை வரையறை ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. சௌதி அரேபியா நாட்டில் நேற்று (மார்ச் 27) இரு நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் பங்குபெற்று மேற்கொள்ளப்பட்ட இந்த ஒப்பந்தத்தின் மூலம் எல்லையில் நிலவி வந்த பதற்றமானது தணிந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 54 ஆண்டுகள் சிரியாவை ஆண்டு வந்த ஆசாத் குடும்பம் வெளியேற்றப்பட்டு இடைக்கால அரசு அமைந்ததிலிருந்து, லெபனானுடனான எல்லையில் பதற்றம் அதிகரித்து வந்தது. இரு நாட்டு எல்லைகளிலும் செயல்பட்டு வந்த ஹிஸ்புல்லா கிளர்ச்சிப்படையினர் அசாத் படைகளுடன் இணைந்து சிரியாவின் உள்நாட்டு போரில் ஈடுபட்டு வந்தனர். சுமார் 14 ஆண்டுகள் நீடித்த இந்த போரில் லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர்.

இம்மாத துவக்கத்தில் சிரியா மற்றும் லெபனான் எல்லைப் பகுதியில் நடைபெற்ற மோதலில் ஏராளமான மக்கள் கொல்லப்பட்டனர். மேலும், கடந்த சில வாரங்களாக இருநாட்டு அதிகாரிகளும் சுமார் 400 கி.மீ. எல்லையிலிருந்த கடத்தல் வழிகளைக் கண்டறிந்து முடக்கி வந்தனர்.

இந்நிலையில், இரு நாடுகளும் தங்களது எல்லையை வரையறுக்கவும் பல்வேறு துறைகளில் சட்டப்பூர்வமான சிறப்பு ஆணையங்களை உருவாக்கவும் ஒப்புக்கொண்டுள்ளதாகவும், அவர்களது எல்லையில் பாதுகாப்பு அச்சுறுத்தல் உண்டாகினால் ஒருங்கிணைந்த வழிமுறைகளை செயல்படுத்த முன்வந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இத்துடன், இரு நாடுகளின் பகுதியில் பாதுகாப்பை நிலைநாட்ட சௌதி அரேபியா துணை நின்று ஆதரவளிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த மார்ச் 26 லெபனான் பாதுகாப்புத் துறை அமைச்சர் மைக்கெல் மெனாஸாவின் சிரியா பயணம் ரத்து செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, சிரியா அமைச்சர் முர்ஹாஃப் அபு கஸ்ரா சௌதி அரேபியாவின் ஜெட்டாஹ்வுக்கு பயணம் செய்தார். அங்கு, சௌதி பாதுகாப்புத் துறை அமைச்சர் காலித் பின் சல்மான் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் தற்போது கையெழுத்தாகியுள்ளது.

இதையும் படிக்க:பாங்காக்: நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்த 30 மாடி கட்டடம்... 43 பேரின் கதி என்ன?

7 பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்வு: அரசாணை வெளியீடு!

தமிழ்நாட்டில் 7 பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளதன்படி,கன்னியாகுமரி,போளூர், செங்கம், சங்ககிரி, கோத்தகிரி, அவினாசி, பெருந்துறை ஆகிய 7 ... மேலும் பார்க்க

பாஜக, மோடி என்றெல்லாம் சொல்லி இனி ஓட்டு கேட்க முடியாது! - துரைமுருகன்

பாஜக, மோடி என்றெல்லாம் சொல்லி இனி யாரும் இங்கு வாக்கு சேகரிக்க முடியாது என அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்தில் தமிழகத்திற்கு கொடுக்கவேண்டிய ரூ. 4,034 கோடியை ... மேலும் பார்க்க

மியான்மர் நிலநடுக்கம்: பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் வாழும் தமிழர்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு!

மியான்மர், தாய்லாந்தில் வெள்ளிக்கிழமை(மார்ச் 28) ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அங்குள்ள தமிழர்களுக்காக உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. உதவி தேவைப்படுவோர் - 1800 309 3793+91 80690 099... மேலும் பார்க்க

சமூக நீதியை நிலைநாட்டும் அரசு! - ஆதி திராவிடர், பழங்குடியினர் நலக் கூட்டத்தில் முதல்வர் பேச்சு

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலனை மேம்படுத்தும் பொருட்டு சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல... மேலும் பார்க்க

தென் கொரிய காட்டுத் தீ: நெருப்பில் சடங்கு செய்த நபர் காரணமா?

தென் கொரியாவில் காட்டுத் தீ ஏற்படக் காரணம் எனச் சந்தேகிக்கப்பட்ட நபரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தவுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. தென் கொரியாவின் மிக மோசமான பேரிடர்களில் ஒன்றாகக் கருதப்படும் இந்தக் காட்டுத... மேலும் பார்க்க

லெபனான் தலைநகரில் இஸ்ரேல் மீண்டும் வான்வழித் தாக்குதல்!

லெபனான் நாட்டு தலைநகரின் மீது இஸ்ரேல் மீண்டும் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. இஸ்ரேல் - ஹிஸ்புல்லா இடையிலான போர்நிறுத்த ஒப்பந்தம் கடந்த 2024 நவம்பர் மாதம் முதல் கடைப்பிடிக்கப்பட்டிருந்த நிலையில் த... மேலும் பார்க்க