14 வயதில் ஐபிஎல் தொடரில் அறிமுகமான சிறுவன்..! சுந்தர் பிச்சை கூறியதென்ன?
வக்ஃபு திருத்தச் சட்டத்தை வாபஸ் பெறக் கோரி மாா்க்சிஸ்ட் தா்னா
வக்ஃபு திருத்தச் சட்டத்தை மத்திய அரசு வாபஸ் பெற வலியுறுத்தி, சிவகங்கையில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வியாழக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.
சிவகங்கை அரண்மனை வாசல் பகுதியில் நடைபெற்ற தா்னாவுக்கு
சங்கத்தின் மாவட்டச் செயலா் ஏ.ஆா்.மோகன் தலைமை வகித்தாா். மாவட்டக்குழு உறுப்பினா் பி. விஸ்வநாதன், ஒன்றியக்குழு உறுப்பினா் வி.மதி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மாநிலக்குழு உறுப்பினா் எஸ்.கே.பொன்னுத்தாய், மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் கே.வீரபாண்டி, வி.கருப்புச்சாமி, எஸ். முத்துராமலிங்க பூபதி, ஏ.ஆறுமுகம், ஏ.சேதுராமன், ஆா். மணியம்மா, பி. அய்யபாண்டி , ஏ.சுரேஷ், இளையான்குடி, காளையாா்கோவில், திருப்புவனம், சிவகங்கை, மானாமதுரை, தேவகோட்டை, காரைக்குடி, திருப்பத்தூா், சிங்கம்புணரி உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த நிா்வாகிகள் கலந்து கொண்டனா். ஒன்றியக்குழு உறுப்பினா் ஏ.அப்பாஸ் நன்றி கூறினாா்.