செய்திகள் :

`வக்ஃப் சட்டத்திருத்தத்தில் இருக்கும் பிரச்னைகள்' - பட்டியலிட்ட சிவில் உரிமைகள் பாதுகாப்பு சங்கம்

post image

'வக்ஃப் (திருத்தம்) சட்டம், 2025 மத விவகாரங்களில் அரசின் ஆபத்தான தலையீடு' என சிவில் உரிமைகள் பாதுகாப்பு சங்கம் (APCR – Association for Protection of Civil Rights) உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்திருக்கிறது. மேலும், இந்த சட்டத்திருத்தத்தால் ஏற்படவிருக்கும் ஜனநாயக உரிமைகள், மத உரிமைகள் பாதுகாப்பு தொடர்பான பல்வேறு பிரச்னைகளையும் பட்டியலிட்டிருக்கிறது.

இந்த விவகாரம் தொடர்பாக APCR தாக்கல் செய்திருக்கும் மனுவில், ``வக்ஃப் திருத்தச் சட்டம் 2025, இந்திய அரசியலமைப்பின் பிரிவுகள் 14, 25, 26 மற்றும் 300A-வை மீறுவதாகும்.

Waqf | வக்ஃப் திருத்த மசோதா
Waqf | வக்ஃப் திருத்த மசோதா

இந்த சட்டம், முஹம்மது நபி காலத்திலிருந்தே குர்ஆன் குறிப்புகள், ஹதீஸ்களில் ஆழமாக வேரூன்றிய நடைமுறையாக இருக்கும் வக்ஃப்பின் அடிப்படையையே நீர்த்துப்போகச் செய்கிறது.

வக்ஃப் வாரியத்தின் சுயாட்சி மற்றும் செயல்திறனுக்கு இந்த விதிகள் பெரும் ஆபத்தை விளைவிக்கும். குறிப்பாக பிரிவு 40ஐ சேர்ப்பதன் மூலம், வக்ஃப் சட்டம் 1995-ல் கூறப்பட்டுள்ள இயற்கை நீதியின் கொள்கைகளை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது.

இந்த சட்டத்திருத்தம் ஆபத்தானது என்பதற்கான பலக் காரணங்கள் இருக்கிறது. அதில் சிலவற்றை பட்டியலிடுகிறோம்.

வக்ஃப் என்பதற்கு பதிலாக 'ஒருங்கிணைந்த வக்ஃப் மேலாண்மை, அதிகாரமளித்தல், செயல்திறன் மற்றும் மேம்பாடு' எனத் தலைப்பை மாற்றுவது தவறானது மட்டுமல்ல, வக்ஃப் சட்டத்தின் அடிப்படை நோக்கத்திற்கே முரணானது.

வக்ஃப் என்ற சொல் மத, வரலாற்று மற்றும் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்தது. அதை மாற்றுவது நடுநிலை அல்ல. மேலும் அந்த வார்த்தை மாற்றம், பூர்வீக சட்ட மரபுகளையும் நீர்த்துப்போகச் செய்யும்.

பாஜக
பாஜக

சட்டமன்றம், மற்ற துறைகளில் 'உள்நாட்டு அமைப்புகளை' மீட்டெடுப்பதற்கு வாதிடுகிறது. ஆனால், இந்த வக்ஃப் விவகாரத்தில், 'நவீனமயமாக்கல்' என்ற போர்வையில் வரலாற்று மரபுகள், மத சின்னங்களை அழிக்கும் பிற்போக்குத்தனமான காலனித்துவ உணர்வுகளையே பிரதிபலிக்கிறது.

இஸ்லாமிய சட்டம் மற்றும் இந்திய நீதித்துறை இரண்டிலும் உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட வக்ஃப் என்ற வார்த்தையை மாற்றுவதற்கு எந்த கட்டாய சட்ட, நிர்வாக அல்லது சமூக தேவையும் இல்லை.

இந்தத் திருத்தம் முஸ்லிம் சமூகத்தின் மத விவகாரங்களில் தன்னிச்சையாக தலையிடுகிறது. இதே போன்ற கட்டுப்பாடுகள் முஸ்லிம் அல்லாத மத நிறுவனங்களுக்குப் பொருந்தாது. இதன் மூலம் மத சுதந்திரம் மட்டுமல்லாமல், நாட்டு மக்களுக்கு மத்தியில் காட்டப்படும் பாகுபாடும் அதிதீவிரமாக கவனிக்கப்பட வேண்டிய விவகாரம்.

முஸ்லிம் சிறுபான்மையினரின் மத விவகாரங்களில், முஸ்லிம் அல்லாதவர்களைச் சேர்க்கும் வக்ஃப் சட்டத் திருத்தம் 2025, 'அனைவரையும் உள்ளடக்கிய' என்றக் கட்டமைப்பின் அடிப்படையில் நிறுவப்படவில்லை என்பதும் இதன்மூலம் தெளிவாகத் தெரிகிறது.

இந்து சமய அறநிலையத்துறை
இந்து சமய அறநிலையத்துறை

உத்தரபிரதேசம், கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களில், இந்துக்கள் மட்டுமே இந்து அறக்கட்டளை நிறுவனங்களில் உறுப்பினர்களாக இருக்க அனுமதிக்கப்படுகிறார்கள். ஆனால், வக்ஃப் மட்டும்தான் 'மதச்சார்பற்ற நிர்வாகக் கொள்கை'-களை மீறுவதாக குறிவைக்கப்படுகிறது.

ஏற்கெனவே, இந்தியாவின் நிறுவன கட்டமைப்பில் பிரதிநிதித்துவம் குறைவாக உள்ள ஒரு சமூகத்தின் சுயாட்சியை, இந்த திருத்தம் நீர்த்துப்போகச் செய்கிறது. எனவே இந்தத் திருத்தம் பாரபட்சமான தாக்கத்தையே எடுத்துக்காட்டுகிறது.

மேலும், மத நிர்வாகத்தில் கட்டாய தலையீடுகள் வகுப்புவாதத்தையும், சமூக அமைதியின்மையையும் தூண்டும் என்ற அபாயம் உள்ளது. மேலும், இந்த சட்டத்தின் மூலம் அரசியலமைப்பின் மதச்சார்பற்ற கட்டமைப்பே, அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கிறது.

முஸ்லிம் அல்லாத மத நிறுவனங்கள் மீது இதே போன்ற கோரிக்கைகள் எதுவும் வைக்கப்படாதபோது, முஸ்லிம்கள் நிர்வாகத்தில் இருக்கும் அமைப்புகள் மீது மட்டும் அத்தகைய விதிகளை சுமத்துவது தேவையுமில்லை, அவசியமுமில்லை, நியாயமுமில்லை.

எனவே, நீதி, ஜனநாயகம், அரசியலமைப்பு ஒருமைப்பாடு ஆகியவற்றின் நலனுக்காக சிறுபான்மை உரிமைகள் மீதான இந்த அத்துமீறல் ரத்து செய்யப்பட வேண்டும்.

அமித் ஷா - மோடி
அமித் ஷா - மோடி

Waqf Act, 1995ல் Section 3(r) (Waqf property என்ற சொல்லுக்கான வரையறை - அதாவது, அது யாரால் தொடங்கப்பட்டது, மத, தொண்டு நோக்கங்கள் உள்ளிட்ட எந்த நோக்கத்துக்காக பயன்படுத்தப்படுகிறது, தனிப்பட்ட சொத்துகளை சட்ட நடைமுறைப்படி எப்படி வக்ஃப் சொத்தாக மாற்றலாம்) விதி நீக்கப்பட்டிருக்கிறது.

இதன் மூலம், வக்ஃப் சொத்துக்களுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்குவதை வேண்டுமென்றே பலவீனப்படுத்தப்படுகிறது. அதனால், மக்களுக்கான தொண்டு நோக்கங்களுக்காக, பல நூறு ஆண்டுகளாக சேவை செய்துவரும் வக்ஃப் சொத்துக்கள் ஆபத்தில் சிக்கக்கூடும்.

இதற்கு முன்பே இந்த சட்ட விதியை நீக்குவது தொடர்பாக இந்த உச்ச நீதிமன்றம் ஒரு வழிகாட்டுதலை வழங்கியிருக்கிறது. அயோத்தி வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி எம்.சித்திக் மஹந்த் சுரேஷ் தாஸ், ``பிரிவு 3(r) ஐ நீக்குவது வக்ஃப் சொத்துக்களைப் பாதுகாக்கும் அடிப்படைக் கொள்கைகளை அரிக்கும் முயற்சியைக் குறிக்கிறது.

மேலும், இது மத சுயாட்சிக்கும் மாநில மேற்பார்வைக்கும் இடையிலான நுட்பமான சமநிலையை சீர்குலைக்கும்" எனக் குறிப்பிடிருக்கிறார். எனவே, இந்தப் பிரிவை நீக்கியிருப்பது நீதித்துறை வழங்கிய முன்னுதாரணங்களுக்கு முரணானது.

டெல்லி உச்ச நீதிமன்றம்
டெல்லி உச்ச நீதிமன்றம்

அதுமட்டுமல்ல, நீண்டகாலமாக அங்கீகரிக்கப்பட்ட மத உரிமைகளை, தன்னிச்சையாக விலக்குவதற்கு ஒரு ஆபத்தான முன்னுதாரணத்தையும் அமைக்கிறது.

இந்த சட்ட விதியை நீக்கியதின் மூலம், வக்ஃப் சொத்துக்கள் மீதான சட்டப்பூர்வ உரிமைகளைப் பாதுகாக்க முயலும் தனிநபர்கள் மீது நியாயமற்ற பாரம் ஏற்றப்படுகிறது.

மேலும், தேவையற்ற வழக்குகளால் நீதிமன்றத்தின் பணிகள் கூடுவதோடு, சொத்துரிமைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் அரசியலமைப்பின் பிரிவு 300A-ன் கீழ் அளிக்கப்பட்ட உரிமைகளும் கேள்விக்குள்ளாகிறது.

இந்த சட்டத்தின் மூலம் வக்ஃப் சொத்துக்கள் தொடர்பான தேவையற்ற, அல்லது திட்டமிட்ட கடுமையாக சர்ச்சைகள் எழும். இது நீண்டகால சட்டப் போராட்டங்களுக்கும், மதச் சொத்துக்கள் தொடர்பான நிச்சயமற்ற தன்மைக்கும் வழிவகுக்கும்.

மேலும், இந்த சட்டம், இதற்கு முன்னர் வக்ஃப் என அரசால் அங்கீகரிக்கப்பட்ட சொத்துகளைக்கூட அரசு கையகப்படுத்த அனுமதிக்கிறது.

அதனால், "அரசு சொத்து" என்று கோரப்படும் நிலங்களில், இதற்கு முன்னர் அரசு அனுமதியுடனோ, அல்லது ஒப்புதலுடனோ கட்டப்பட்ட மசூதிகள், தர்காக்கள், கல்லறைகள் மற்றும் மத நிறுவனங்கள் பாதிக்கப்படலாம்.

மேலும், கையகப்படுத்துதலை எளிதாக்குவதற்காக வக்ஃப் நிலங்களை அரசு சொத்தாக தன்னிச்சையாக வகைப்படுத்தும் அபாயமும் உள்ளது.

வக்ஃப் வாரியம்

வரலாற்று ரீதியாக ஆவணங்கள் இன்றியும் தொடர்ச்சியான மதப் பயன்பாட்டின் மூலம் வக்ஃப் சொத்துகள் தீர்மானிக்கப்பட்டன. சட்ட விளக்கத்தில் ஏற்பட்ட இந்த திடீர் மாற்றம், வக்ஃப் அமைப்பையே பலவீனப்படுத்தும்.

அரசின் உரிமைகோரல்கள் அல்லது தகராறுகளின் அடிப்படையில் வக்ஃப் சொத்துக்கள் அபகரிக்கப்பட்டால், அது முஸ்லிம் சமூகத்திற்குக் கிடைக்கும் மத மற்றும் சமூக சொத்துக்களின் இழப்புக்கு வழிவகுக்கும்.

ஒரு காலத்தில் பயனரால் வக்ஃப் செய்யப்பட்ட வக்ஃப் சொத்துக்களைப் பாதுகாப்பதில் அல்லது நிர்வகிப்பதில் வக்ஃப் வாரியம் செயல்பாட்டு சிக்கல்களை எதிர்கொள்ளும்.

ஒட்டுமொத்தமாக, இந்தத் திருத்தம் பிரிவுகள் 25 மற்றும் 26 ஐ மீறுவதாகும், ஏனெனில் இது முஸ்லிம் சமூகத்தின் மத சுயாட்சியின் மீதான அரசியலமைப்பிற்கு முரணான அத்துமீறலாகும்." எனக் குறிப்பிட்டிருக்கிறது.

மேலும் இந்த சட்டத்தை எதிர்த்து 10-க்கும் மேற்பட்ட மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டின் ஆளும் கட்சியான தி.மு.க, காங்கிரஸ் எம்.பி இம்ரான் பிரதாப்கர்ஹி, எம்.பி முகமது ஜாவேத், AIMIM தலைவர் அசாவுதீன் ஓவைசி, டெல்லி ஆம் ஆத்மி எம்.எல்.ஏ அமானத்துல்லா கான், சமஸ்தா கேரள ஜமியத்துல் உலமா , இந்திய யூனியன் முஸ்லிம் லீக் , அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் (AIMPLB), ஜமியத் உலமா-இ-ஹிந்த் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும் வழக்கு தொடர்ந்துள்ளன.

ஆ. ராசா

தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் அ.ராஜா உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கும் மனுவில், ``பரவலான எதிர்ப்பையும் மீறி, வக்ஃப் சட்டத்திருத்த மசோதா மீதான நாடாளுமன்றக் குழு (ஜே.பி.சி) உறுப்பினர்கள், பிற உறுப்பினர்கள் எழுப்பிய ஆட்சேபனைகளை முறையாகக் கருத்தில் கொள்ளாமல், வக்ஃப் திருத்த மசோதா, 2025 மத்திய அரசால் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. வக்ஃப் (திருத்தம்) சட்டம், 2025 உடனடியாக அமல்படுத்தப்படுவது, தமிழ்நாட்டில் சுமார் 50 லட்சம் முஸ்லிம்களின் உரிமைகளையும், நாட்டின் பிற பகுதிகளில் உள்ள 20 கோடி முஸ்லிம்களின் உரிமைகளையும் மீறுவதாகவும், பாரபட்சம் காட்டுவதாகவுமே அமைந்திருக்கிறது" எனக் குறிப்பிட்டிருக்கிறது.

NDA : ADMK - BJP கூட்டணியில் சலசலப்பு? | Waqf : உச்ச நீதிமன்றம் அதிரடி! | Imperfect Show 17.4.2025

இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோ ஃவில்,* `வருங்கால முதல்வரே..!' - நயினார் நகேந்திரன் போஸ்டர்களால் பரபரப்பு* கூட்டணி ஆட்சி குறித்து தேசியத் தலைமை முடிவு செய்யும்! - நயினார்* கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பே இல்லை! - ... மேலும் பார்க்க

'பேச்சுவார்த்தைக்குத் தயார்!' - இறங்கிவரும் சீனா; அமெரிக்கா என்ன செய்யப் போகிறது?

வரி Vs வரிஇதுதான் தற்போது அமெரிக்கா - சீனாவிற்கு இடையே நடந்துகொண்டிருக்கும் ஒன்று. தேர்தலில் வெற்றிப்பெற்று அமெரிக்க அதிபராக பொறுப்பேற்கும் முன்னரே, சீனா அமெரிக்காவிற்குள் போதை மருந்து கடத்தி வருகிறது... மேலும் பார்க்க

`புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்திற்கு மூடுவிழா’ - ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு எதிர்ப்பு

2தமிழ் வளர்ச்சிக்கு வித்திட்ட நிறுவனம்...புதுச்சேரி லாஸ்பேட்டையில் செயல்பட்டு வரும் மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தை மூடுவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. அது தொடர்பாக புதுச்சேரி தமிழார்வலர்கள... மேலும் பார்க்க

மேல்பாதி: சமூகப் பிரச்னையால் மூடப்பட்ட கோயில்; நீதிமன்ற உத்தரவால் திறப்பு... முழு பின்னணி!

அமைதிப் பேச்சு வார்த்தை தோல்விவிழுப்புரம் மாவட்டம், மேல்பாதி கிராமத்தில் அமைந்திருக்கிறது அருள்மிகு தர்மராஜா திரௌபதி அம்மன் கோயில். கிராமத்தின் மையப்பகுதியில் அமைந்திருக்கும் இந்த கோயிலுக்கு கடந்த 201... மேலும் பார்க்க

`கொளுத்திடுவேன்...’ - மிரட்டிய ராணிப்பேட்டை திமுக நிர்வாகி; பறிபோன கட்சிப் பதவி; நடந்தது என்ன?

தி.மு.க-வின் ராணிப்பேட்டை மாவட்ட வர்த்தகர் அணி அமைப்பாளராக இருந்தவர் எஸ்.எல்.எஸ்.தியாகராஜன். ராணிப்பேட்டை சிப்காட் மெயின் குடோனிலிருந்து, அந்த மாவட்டத்தில் இருக்கிற அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் மதுபா... மேலும் பார்க்க