செய்திகள் :

வக்ஃப் சொத்துகள்: ம.பி., கா்நாடகம், ராஜஸ்தானின் பதில்கள் திருப்திகரமாக இல்லை: நாடாளுமன்றக் குழு

post image

வக்ஃப் சொத்துகள் தொடா்பாக மத்திய பிரதேசம், கா்நாடகம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் அளித்த பதில்கள் திருப்தியளிக்கவில்லை என்று வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை ஆராய்ந்துவரும் நாடாளுமன்ற கூட்டுக் குழு தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் முஸ்லிம்கள் சொத்துகளை நிா்வகித்து வரும் வக்ஃப் வாரியங்கள் தொடா்பாக சில மாற்றங்களுடன் வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்தது. எதிா்க்கட்சிகளின் கடும் எதிா்ப்பைத் தொடா்ந்து, மசோதாவை ஆய்வு செய்ய நாடாளுமன்றக் கூட்டுக் குழு அமைக்கப்பட்டது.

இதையடுத்து, மாநிலங்களில் உள்ள வக்ஃப் சொத்துக்களின் நிலை மற்றும் தன்மை, அந்த சொத்துகளால் கிடைக்கும் வருமானம், சொத்துக்களின் தன்மையை மாற்ற முடியுமா என்பது உள்ளிட்ட பல்வேறு விவரங்களை நாடாளுமன்ற கூட்டுக் குழு கோரியது.

இதற்கு பாஜக ஆளும் மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் காங்கிரஸ் ஆளும் கா்நாடகம் ஆகிய 3 மாநிலங்கள் வழங்கிய பதில்கள் திருப்திகரமாக இல்லை என்று தெரிவித்துள்ள கூட்டுக் குழு, மூன்று மாநிலங்களும் தங்கள் பதில்களை மீண்டும் வழங்க 15 நாள்கள் கூடுதல் அவகாசம் அளித்துள்ளது. இத்தகவலை நாடாளுமன்ற கூட்டுக் குழுத் தலைவரும் பாஜக எம்.பி.யுமான ஜகதாம்பிகா பால் தெரிவித்தாா்.

அவா் கூறுகையில், ‘சிறுபான்மை விவகாரத் துறையால் குறிப்பிடப்பட்ட வடிவத்தில் இந்த மாநிலங்கள் பதில்களை வழங்கவில்லை. தேவைப்பட்டால், மூன்று மாநிலப் பிரதிநிதிகளையும் குழு அமா்வில் மீண்டும் ஆஜராக அழைப்போம். வரும் ஜனவரி 18 முதல் 20-ஆம் தேதிவரை கொல்கத்தா, பாட்னா மற்றும் லக்னௌ ஆகிய நகரங்களுக்கு நாடாளுமன்ற கூட்டுக் குழு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, பல்வேறு தரப்பிடம் கருத்துகளை கேட்டறிய உள்ளது.

குழுவின் சில உறுப்பினா்கள் ஜம்மு காஷ்மீருக்கும் கருத்து கேட்க செல்ல வேண்டுமென விருப்பம் தெரிவித்துள்ளனா். இதுதொடா்பாக மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவுடன் ஆலோசனை நடத்திய பிறகு முடிவு எடுக்கப்படும்’ என்றாா்.

வக்ஃப் மசோதா நாடாளுமன்ற கூட்டுக் குழு, குளிா்கால கூட்டத்தொடரில் அறிக்கை சமா்பிக்கும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், குழுவின் பதவிக் காலம் நீட்டிக்கப்பட்டது. வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில் அறிக்கை சமா்ப்பிக்கப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

காங்கிரஸுக்கு ஒளியாய் இருந்து வழிகாட்டியவர் மன்மோகன் சிங்: சோனியா காந்தி

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிறந்த நண்பர், வழிகாட்டி, தத்துவவாதி என காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார். அவரின் மறைவு தனிப்பட்ட முறையில் பேரிழப்பு எனவும் குறிப்பிட்டுள்ளார். நேர்ம... மேலும் பார்க்க

கார்கே தலைமையில் காங்., செயற்குழு கூட்டம்!

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் இன்று மாலை செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. தில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில், ராகுல் காந்தி, சோனியா காந்தி உள்பட காங்கிரஸ் ... மேலும் பார்க்க

2024 - பிரபலங்களின் திருமணங்கள்!

திருமண பந்தத்தில் இந்த ஆண்டும் பல பிரபலங்கள் இணைந்திருக்கிறார்கள். ஏனோ பெரும்பாலான பிரபலங்கள் காதல் திருமணத்தையே விரும்புகிறார்கள்.அதுபோலவே இந்த ஆண்டும் பிரபலங்கள் பலர் காதல் திருமணம் செய்துகொண்டனர். ... மேலும் பார்க்க

திரிபுராவில் சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த 100க்கும் மேற்பட்டோர் கைது!

தலைநகர் அகர்தலாவில் கடந்த 5 மாதங்களில் மட்டும் சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த 100க்கும் மேற்பட்டோர் கைது! கடந்த ஆகஸ்டு மாதம் வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்க்கப்பட்ட பி... மேலும் பார்க்க

மன்மோகன் சிங் மறைவு: அசாமில் 7 நாள் துக்கம் அனுசரிப்பு!

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கன் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அசாம் அரசு 7 நாள்கள் துக்கம் அனுசரிக்கப்படுவதாக அறிவித்துள்ளது. முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங்(92 )உடல்நலக் குறைவு காரணமாக தில்லி ... மேலும் பார்க்க

மன்மோகன் சிங் உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி!

தில்லியில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் வயதுமூப்பு காரணமாக வியாழக்கிழமை(டிச. 26) இரவு ... மேலும் பார்க்க