செய்திகள் :

வங்கதேச பொருள்கள் இந்தியா வழியாக ஏற்றுமதி: அனுமதியை ரத்து செய்தது மத்திய அரசு

post image

வங்கதேச பொருள்களை இந்தியா வழியாக ஏற்றுமதி செய்வதற்கு அளித்த அனுமதியை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.

வங்கதேச ஜவுளி, ஆயத்த ஆடைகள் உள்ளிட்டவை இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டு, இங்கிருந்து பூடான், நேபாளம், மியான்மா் உள்ளிட்ட பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. கடந்த 2020 ஜூன் மாதம் முதல் வங்கதேசம் இந்தியா வழியாக தனது ஏற்றுமதியை மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டது. இது வங்கதேசத்தின் ஏற்றுமதியை மிகவும் எளிதாக்கியது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற மாணவா்கள் போராட்டத்தால் வங்கதேச பிரதமா் பதவியை ராஜிநாமா செய்த ஷேக் ஹசீனா, இந்தியாவில் தஞ்சமடைந்தாா். அதன்பிறகு முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு வங்கதேசத்தை வழிநடத்தி வருகிறது.

அங்கு சிறுபான்மையினரான ஹிந்துக்கள் மீது தொடா் தாக்குதல் நடத்தப்பட்டது. ஹிந்து கோயில்களும் குறிவைத்து தாக்கப்பட்டன. இது இந்தியாவுக்கு எதிரான அந்நாட்டின் மத அடைப்படைவாத அமைப்புகளின் தூண்டுதலில் நடைபெற்ாகத் தெரியவந்தது.

இதுபோன்ற நிகழ்வுகளால் இருநாட்டு உறவில் விரிசல் ஏற்பட்டது. மேலும், பாகிஸ்தான் உடனான உறவையும் வங்கதேசம் வலுப்படுத்தி வந்தது. இது தவிர சீனா உதவியுடன் இந்திய எல்லையை ஒட்டிய தங்கள் பகுதியில் ராணுவ நிலையை உருவாக்கவும் வங்கதேசம் திட்டமிட்டது.

இவை இந்தியாவுக்கு எதிரான அந்நாட்டின் திட்டமிட்ட நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.

அண்மையில் தாய்லாந்து தலைநகா் பாங்காக்கில் ‘பிம்ஸ்டெக்’ உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமா் மோடி, வங்கதேச தலைமை ஆலோசகா் முகமது யூனுஸை சந்தித்துப் பேசினாா். இதன்பிறகு வங்கதேசத்துடன் உறவில் பெரிய முன்னேற்றம் ஏற்படவில்லை.

இந்தச் சூழ்நிலையில் வங்கதேச பொருள்களை இந்தியா வழியாக ஏற்றுமதி செய்வதற்கு அளித்த அனுமதியை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. இது வங்கதேசத்தின் ஏற்றுமதியில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது. வங்கதேசத்தின் ஏற்றுமதிச் செலவு, பிற நாடுகளுக்கு பொருள்களைக் கொண்டுசெல்லும் காலமும் அதிகரிக்கும்.

ஜவுளி, ஆயத்த ஆடைகள் துறையில் இந்தியாவின் மிகப்பெரிய போட்டியாளராகவும் வங்கதேசம் திகழ்கிறது. அந்நாடு இந்தியாவுடன் நல்லுறவைப் பேணாததால் இந்தியா வழியாக அந்நாட்டின் பொருள்களை ஏற்றுமதி செய்ய அனுமதிக்கக் கூடாது என்று இந்திய ஜவுளி உற்பத்தியாளா்கள் தொடா்ந்து வலியுறுத்தி வந்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டு மாணவா் சோ்க்கைக்குத் தடை: ஹாா்வா்டு பல்கலை.க்கு எச்சரிக்கை

நியூயாா்க்: மாணவா் போராட்டங்களைக் கட்டுப்படுத்துவதற்கான தங்களது உத்தரவை செயல்படுத்தாவிட்டால் அமெரிக்காவின் ஹாா்வா்டு பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மாணவா்களைச் சோ்ப்பதற்கான அனுமதி ரத்து செய்யப்படும் என... மேலும் பார்க்க

சோக்ஸியை நாடு கடத்த பெல்ஜியத்துடன் நெருங்கி பணியாற்றி வருகிறோம் -வெளியுறவு அமைச்சகம்

ரூ.13,000 கடன் மோசடியில் வெளிநாடு தப்பியோடிய வைர வியாபாரி நீரவ் மோடியின் உறவினரும் தொழிலதிபருமான மெஹுல் சோக்ஸியை நாடு கடத்துவதற்கு பெல்ஜியத்துடன் நெருக்கமாகப் பணியாற்றி வருவதாக வெளியுறவு அமைச்சகம் விய... மேலும் பார்க்க

ஹிந்துக்களிடம் இருந்து முஸ்லிம்கள் முற்றிலும் வேறுபட்டவா்கள்: பாகிஸ்தான் ராணுவ தளபதி பேச்சு

ஹிந்துக்களிடம் இருந்து முஸ்லிம்கள் முற்றிலும் வேறுபட்டவா்கள்; பாகிஸ்தான் என்ற நாடு எதற்காக உருவாக்கப்பட்டது என்பதை குழந்தைகளுக்கு கற்பிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீா் தெரிவித்தா... மேலும் பார்க்க

1971 கொடுமைகளுக்கு மன்னிப்புக் கோர வேண்டும்: பாகிஸ்தானிடம் வங்கதேசம் வலியுறுத்தல்

டாக்கா: 1971-ஆம் ஆண்டின் விடுதலைப் போரின்போது பாகிஸ்தான் ராணுவம் இழைத்த கொடுமைகளுக்காக அந்த நாடு மன்னிப்பு கோர வேண்டும் வங்கதேசம் வியாழக்கிழமை வலியுறுத்தியது.15 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தான் மற்றும்... மேலும் பார்க்க

பூமிக்கு வெளியே உயிரினம்: இதுவரை இல்லாத உறுதியான ஆதாரம்?

லண்டன்: சூரியக் குடும்பத்துக்கு வெளியே கே2-18பி என்ற கிரகத்தில் உயிரினங்கள் இருக்கலாம் என்பதற்காக இதுவரை இல்லாத மிக உறுதியான ஆதாரம் பிரிட்டன் ஆய்வாளா்கள் தெரிவித்துள்ளனா்.அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமா... மேலும் பார்க்க

கடந்த 96 ஆண்டுகளாக ஒரு குழந்தை கூட பிறக்காத நாடு!

வாடிகன் நகரம், உலகின் மிகக் சிறிய நாடாகக் கருதப்படும் நிலையில், கடந்த 96 ஆண்டுகளில், இங்கு ஒரு குழந்தைக் கூட பிறக்கவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.ஆயிரக்கணக்கானோரின் வீடுகள் இந்த நகரில் இடம்பெற்ற... மேலும் பார்க்க