கூடுதல் பணிகளைச் செய்ய மாட்டோம்! ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்ட ஊழியா்கள் முடி...
வசூல் ரீதியாக விஜய்யின் டாப் 10 படங்கள் - புகைப்படங்கள்
லியோ (2023)
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், ரசிகர்ளின் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் விஜய், திரிஷா நடித்த லியோ படம் உலகளவில் சுமார் ரூ.620 கோடி வசூலித்து சாதனை படைத்தது.
வாரிசு (2023)

தொழில் போட்டிகள் மற்றும் குடும்பப் பிரச்னைகளுக்கு இடையே விஜய் எவ்வாறு தன் குடும்பத்தையும், தொழிலையும் காப்பாற்றுகிறார் என்பதே கதை. உலகளவில் சுமார் ரூ.302 முதல் ரூ.305 கோடி வசூலித்த குடும்பப்பாங்கான அதிரடி கலவை படம் இது.
பிகில் (2019)

அப்பா - மகன் என இரட்டைக் கதாபாத்திரத்தில் விஜய் நடித்துள்ள படம். ரூ.300 முதல் ரூ.305 கோடி வசூலித்து சாதனை படைத்த படம்.
மாஸ்டர் (2021)

லோகேஷ் கனகராஜ் இயக்கியதில் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் மாஸ்டர் திரைப்படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டது. இந்த பிளாக்பஸ்டர் படம் ரூ.245 முதல் ரூ.260 கோடி வசூலித்து சாதனை படைத்தது.
மெர்சல் (2017)

மருத்துவம் வியாபாரமாவதற்கு எதிராகப் பொங்கியெழும் விஜய், அதற்கு எதிராக என்ன செய்தார் என்பதே மெர்சல் படத்தின் கதை. அட்லீயின் சமூக அதிரடி படத்தில் விஜய் மூன்று வேடங்களில் நடித்த வசூல் ரீதியாக ரூ.255 முதல் ரூ.259 கோடி வசூலித்தது.
சர்கார் (2018)

தேர்தலில் வாக்கு அளிப்பதன் முக்கியத்துவத்தை அழுத்தமாக உணர வைத்த வெகுசன திரைப்படம். வசூல் ரீதியாக உலகம் முழுவதும் ரூ.260 கோடி வசூலித்து சாதனை படைத்தது.
பீஸ்ட் (2022)

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் பீஸ்ட். நகைச்சுவை, ஆக்ஷன் மற்றும் காதல் கலந்த திரைப்படமாக உருவாகியுள்ள படம் இது. வசூல் ரீதியாக இந்த படம் ரூ.236 முதல் ரூ.253 கோடி வரை வசூலித்து சாதனை படைத்தது.
தெறி (2016)

அதிரடி காதல் திரைப்படம். இயக்குநர் அட்லி இயக்கத்தில் விஜய், சமந்தா, எமி ஜாக்சன், பிரபு மற்றும் மகேந்திரன் ஆகியோர் நடித்துள்ளனர். இசை ஜி வி பிரகாஷ் குமார். வசூல் ரீதியாக ரூ.155 முதல் ரூ.170 கோடி வசூலித்து சாதனை படைத்தது.
துப்பாக்கி (2012)

ஸ்லீப்பர் செல்களைப் பற்றி தமிழில் பேச வைத்த முதல் தமிழ் திரைப்படம். வசூல் ரீதியாக ரூ.131 முதல் ரூ.160 கோடி வசூலித்து சாதனை படைத்தது.
கத்தி (2014)

இரட்டை வேட ஆள்மாறாட்டக் கதை. வசூல் ரீதியாக ரூ.129 முதல் ரூ.130 கோடி வசூலித்தது.