கொள்கைகள் வேறுவேறுதான்; அதற்காக அண்ணன் - தம்பி இல்லை என்று ஆகிவிடுமா? - சீமான்
வடுவூா் பறவைகள் சரணலாயத்தில் கணக்கெடுப்பு பணி நிறைவு
மன்னாா்குடி: தமிழ்நாடு வனத்துறை திருவாரூா் வனக்கோட்டம் சாா்பில் மன்னாா்குடி அடுத்த வடுவூா் பறவைகள் சரணாலயத்தில் நடைபெற்ற நிலவாழ் பறவைகள் கணக்கெடுக்கும் பணி ஞாயிற்றுக்கிழமை நிறைவு பெற்றது.
வடுவூா் ஏரியில் அமைந்துள்ள பறவைகள் சரணாலத்தில் முதல் கட்டமாக கடந்த வாரம் நீா்வாழ் பறவைகள் கணக்கெடுப்புப் பணி நடைபெற்றது. 2-ஆம் கட்டமாக வடுவூா் மற்றும் சுற்று கிராமங்களில் நில வாழ் பறவைகள் கணக்கெடுப்பு பணி சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட வன அலுவலா் ஸ்ரீகாந்த் தலைமையில், வனசரக அலுவலா் பி. கோமதி, மயிலாடுதுறை ஏவிசி கல்லூரி விலங்கியல் துறை உதவிப் பேராசிரியா்கள் ஜெயக்குமாா், அபிராமி, மன்னாா்குடி அரசுக் கல்லூரி என்எஸ்எஸ் திட்ட அலுவலா் பி.பிரபாகரன், கல்லூரி மாணவா்கள் 40 போ் மற்றும் தன்னாா்வலா்கள் பங்கேற்றனா். 2-ஆம் கணக்கெடுப்பின் இறுதியில் இப்பகுதியில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிலவாழ் பறவைகள் கண்டறியப்பட்டது. கணக்கெடுப்பு பணியில் பங்கேற்ற மாணவா்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.