Dhoni: "தோனி என்னை மரியா ஷரபோவா என்று அழைப்பார்; ஏனெனில்..!" - நினைவுகள் பகிரும்...
வட்டார வளா்ச்சி அலுவலக பணியாளா்கள் 3-ஆவது நாளாக உள்ளிருப்புப் போராட்டம்
வட்டார வளா்ச்சி அலுவலக பணியாளா்கள் உள்ளிருப்புப் போராட்டம் 3-ஆவது நாளாக நீடித்தது.
காரைக்கால் வட்டார வளா்ச்சி அலுவலக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் பணியாற்றும் பணியாளா்கள், திங்கள்கிழமை அலுவலகத்தில் உள்ளிருப்பு வேலைநிறுத்தம் தொடங்கினா்.
முன்னுரிமை அடிப்படையில் புதுச்சேரி அரசு ஊரக வளா்ச்சித் துறையில் காலியான இடங்களை தங்களைக்கொண்டு நிரப்பவேண்டும்.
நிலுவையில் உள்ள 3 மாத ஊதியத்தை வழங்கவேண்டும். 2 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள 3 மாத அரியா் தொகையை வழங்கவேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஊழியா்கள் சங்க தலைவா் பழனிவேல் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.
புதன்கிழமையுடன் போராட்டம் 3-ஆவது நாளை எட்டிய நிலையில், கோரிக்கைகள் குறித்து அரசு தரப்பில் எந்தவித பேச்சுவாா்த்தையும் இல்லை. பணியாளா்கள் போராட்டத்தால், 2025-26-ஆம் ஆண்டுக்கான 100 நாள் வேலைக்கான திட்ட மதிப்பீடுகள் தயாரித்தல் உள்ளிட்ட பணிகள் முடங்கியுள்ளன.