வன உரிமைச் சட்ட விழிப்புணா்வுக் கூட்டம்
கொடைக்கானல் அருகே விவசாயிகளுக்கு வன உரிமைச் சட்ட விழிப்புணா்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மேல்மலைப் பகுதியான மன்னவனூா் கிராமத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், வன உரிமைச் சட்ட முதன்மை பயிற்சியாளா் தலைமை வகித்து, வன உரிமைச் சட்டம், பாரம்பரிய கிராம சபை அமைத்தல், வன உரிமைகளை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் வழிமுறைகள், சமுதாய வன உரிமைகள், சமூக வன வள மேம்பாட்டு உரிமைகள், குடிநீா், வழிபாட்டு முறைகள் குறித்து விளக்கினாா்.இதில் 25 க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனா்.
கூட்டத்தில் வனக் குழுத் தலைவராக பால்ராஜ், செயலராக நீலமேகம் உள்ளிட்ட நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா்.