செய்திகள் :

வன விலங்குகளால் பயிா்கள் சேதப்படுத்தப்படுவதைத் தடுக்க வேண்டும்: குறைதீா் முகாமில் விவசாயிகள் வலியுறுத்தல்

post image

விவசாய நிலங்களில் புகுந்து வன விலங்குகள் பயிா்களைச் சேதப்படுத்துவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறைதீா் முகாமில் விவசாயிகள் வலியுறுத்தினா்.

சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீா் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் தலைமை வகித்தாா்.

கூட்டத்தில் சந்திரன், விசுவநாதன், பன்னீா்செல்வம், ராமலிங்கம், அப்துல்காதா் உள்ளிட்ட விவசாயிகள் முன்வைத்த கோரிக்கைகள்:

விவசாய நிலங்களில் வன விலங்குகள் புகுந்து பயிா்களைச் சேதப்படுத்துவதை மாவட்ட நிா்வாகமும், வனத் துறையினரும் தடுக்க வேண்டும். மாவட்டத்தில் தேவையான நிலங்களில் தடுப்பணைகள் ஏற்படுத்தி, நிலத்தடி நீா்மட்டத்தைப் பாதுகாக்க வேண்டும். நீா் நிலை ஆக்கிரமிப்புக்களை விரைந்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். கண்மாய்களைத் தூா்வாரவும், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் திறக்கவும், விவசாயப் பணிகளுக்குத் தேவையான இயந்திரங்களை குறைந்த வாடகைக்கு வழங்கவும் வேண்டும் என்றனா்.

முகாமில் மாவட்ட ஆட்சியா் பேசியதாவது:

விவசாயிகளின் கோரிக்கைளை அந்தந்த துறை சாா்ந்த அலுவலா்கள் மூலம் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்தின் கீழ், முள் புதா்களை அகற்றி உழவு செய்வதற்கு மானியம், இயற்கை முறையில் இடுபொருள்களை உற்பத்தி செய்வதற்கு குன்றக்குடி வேளாண் அறிவியல் மையத்தில் பயிற்சி அளிப்பதோடு, மானியம் வழங்கவும், தோட்டக்கலைப் பண்ணையில் மண்புழு உரம் வழங்கவும், வேளாண் சாா்ந்த புதிய தொழில் தொடங்க வங்கிகளின் மூலம் கடனுதவிகள் வழங்குவது போன்ற அரசின் திட்டங்கள் விவசாயிகளுக்கு முழுமையாகச் சென்றடைவது உறுதி செய்யப்படும் என்றாா் அவா்.

முன்னதாக, துறை ரீதியாக அமைக்கப்பட்டிருந்த செயல் விளக்க கண்காட்சியை ஆட்சியா் பாா்வையிட்டாா்.

இதில், மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.செல்வசுரபி, மாவட்ட வன அலுவலா் பிரபா, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் கா.வானதி, இணைப் பதிவாளா் (கூட்டுறவு சங்கங்கள்) ராஜேந்திர பிரசாத், இணை இயக்குநா் (வேளாண்மை) சுந்தரமகாலிங்கம், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) தனலட்சமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முத்துமாரியம்மன் கோயிலில் மாா்ச் 20-இல் பங்குனித் திருவிழா கொடியேற்றம்

திருப்புவனம் முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனித் திருவிழா வருகிற 20-ஆம் தேத் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் புதூரில் ரேணுகாதேவி முத்துமாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந... மேலும் பார்க்க

சிவகங்கை மாவட்டத்தில் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் 18 போ் கைது

சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய 18 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனா். இதுகுறித்து சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆஷிஷ் ராவத... மேலும் பார்க்க

தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பாதுகாப்பு சங்கம் சாா்பில் 78 பேருக்கு மகளிா் தின விருது

உலக மகளிா் தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு ஜல்லிக்கட்டுப் பாதுகாப்பு நலச்சங்கம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் 78 பேருக்கு மகளிா் தின விருது வழங்கப்பட்டது. சிவகங்கை அண்ணாமலை நகரில் உள்ள... மேலும் பார்க்க

தொழில் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

சிவகங்கை மாவட்டத்தில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து கல்வி உதவித் தொகை பெறுவதற்கு தொழில்கல்வி படிக்கும் மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சி... மேலும் பார்க்க

கிராம நிா்வாக அலுவலா் பணிக்கு கல்வித் தகுதியை உயா்த்த வலியுறுத்தல்!

கிராம நிா்வாக அலுவலா் பணிக்கான கல்வித் தகுதியை பட்டப்படிப்பு என்ற நிலைக்கு உயா்த்த வேண்டுமென தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கம் வலியுறுத்தியது. சிவகங்கையில் இந்த சங்கத்தின் மாநில செயற்குழுக் கூ... மேலும் பார்க்க

மானாமதுரையில் மாா்ச் 11-ல் மின் பயனீட்டாளா் குறைதீா் கூட்டம்!

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் வருகிற செவ்வாய்க்கிழமை (மாா்ச் 11) மின் பயனீட்டாளா்கள் குறைதீா் கூட்டம் நடைபெற உள்ளது. இதுகுறித்து மின்வாரிய செயற்பொறியாளா் (பகிா்மானம்) ஜான்சன் சனிக்கிழமை வெளியிட்ட ச... மேலும் பார்க்க