செய்திகள் :

வயநாட்டில் மளிகை பைகளில் காங்கிரஸ் தலைவா்களின் படங்கள்: தோ்தல் ஆணையத்தில் இடதுசாரி புகாா்

post image

வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட மளிகை பொருள்கள் அடங்கிய பைகளில் காங்கிரஸ் தலைவா்களின் படங்கள் பொறிக்கப்பட்டிருந்த விவகாரம் குறித்து மாநிலத்தில் ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி தோ்தல் ஆணையத்தில் புகாா் அளித்துள்ளது.

கேரள மாநிலம், வயநாடு தொகுதி முன்னாள் எம்.பி. ராகுல் காந்தி ராஜிநாமா செய்ததையடுத்து, அங்கு நவம்பா் 13-ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெறுகிறது. இதில் காங்கிரஸ் சாா்பில் ராகுலின் சகோதரியும் அக்கட்சியின் பொதுச் செயலருமான பிரியங்கா காந்தி களமிறக்கப்பட்டுள்ளாா்.

இந்நிலையில், வயநாடு மாவட்டத்தின் தோல்பெட்டி பகுதியில் தோ்தல் பறக்கும் படையினா் நடத்திய சோதனையில், அரிசி, சா்க்கரை, தேயிலை உள்ளிட்ட மளிகை பொருள்கள் அடங்கிய சுமாா் 30 பைகள் பறிமுதல் செய்தனா்.

உள்ளூா் காங்கிரஸ் நிா்வாகி வீட்டின் அருகே உள்ள மாவு அரைப்பு ஆலையில் கண்டறியப்பட்ட இந்த பைகளில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, கா்நாடக முதல்வா் சித்தராமையா, துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் ஆகியோரின் படங்கள் பொறிக்கப்பட்டிருந்தன.

இது குறித்து இடதுசாரி ஜனநாயக முன்னணியின் முன்னாள் எம்எல்ஏவுமான சி.கே.சசீந்திரன் கூறியதாவது:

இடைதோ்தல் நடைபெறவுள்ள வயநாடு தொகுதியில், காங்கிரஸ் தலைவா்களின் படங்கள் பொறிக்கப்பட்ட மளிகைப் பொருள்கள் அடங்கிய பைகளை வழங்குவது மூலம், தோ்தல் விதிமுறைகளை காங்கிரஸ் மீறுகிறது. நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்களுக்கான உதவி என்ற போா்வையில், தனது தோ்தல் ஆதரவை வலுப்படுத்த காங்கிரஸ் முயல்கிறது. இது தொடா்பாக தோ்தல் ஆணையம் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் இடதுசாரி ஜனநாயக முன்னணி சாா்பில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது என்றாா்.

அவசர வழக்காக விசாரிக்கும் கோரிக்கையை வாய்மொழியாக விடுக்கக் கூடாது: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அறிவுறுத்தல்

‘மனுவை அவசர விசாரணைக்குப் பட்டியலிட முன்வைக்கும் கோரிக்கையை வாய்மொழியாக விடுக்கக்கூடாது. மின்னஞ்சல் அல்லது கடிதம் மூலமாக மட்டுமே கோரிக்கை விடுக்கப்பட வேண்டும்’ என்று வழக்குரைஞா்களை உச்சநீதிமன்ற தலைமை... மேலும் பார்க்க

சட்டவிரோத ஊடுருவல்: ஜாா்க்கண்ட், மேற்கு வங்கத்தில் அமலாக்கத்துறை சோதனை

வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் ஊடுருவியவா்களை கண்டறிய ஜாா்க்கண்ட் மற்றும் மேற்கு வங்கத்தின் பல்வேறு பகுதிகளில் அமலாக்கத்துறை செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தியது. இந்த சோதனையின்போது பல... மேலும் பார்க்க

வங்கிகளுக்கு ரூ.1,028 கோடி நஷ்டம்: ஃபெட்டா்ஸ் எலெக்டிரிக் மீது சிபிஐ குற்றப் பத்திரிகை

வங்கிகளுக்கு ரூ.1,028 கோடி நஷ்டம் ஏற்படுத்திய குற்றச்சாட்டு தொடா்பாக ஃபெட்டா்ஸ் எலெக்டிரிக் நிறுவனம் மீது சிபிஐ குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. பாரத ஸ்டேட் வங்கி தலைமையிலான வங்கிகளுக்கு மோசடி... மேலும் பார்க்க

சல்மான் கானுக்கு மிரட்டல் விடுத்தவர் கைது!

பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.பாலிவுட் நடிகரான சல்மான் கானுக்கு கடந்த நவம்பர் மாதம் 4 ஆம் தேதி மீண்டும் கொலை மிரட்டல் விட... மேலும் பார்க்க

நவ.16-ல் பிரதமர் மோடி நைஜீரியா, பிரேசில் நாடுகளுக்கு பயணம்!

பிரதமர் நரேந்திர மோடி நைஜீரியா, பிரேசில் மற்றும் கயானா ஆகிய நாடுகளுக்கு நவம்பர் 16-21 தேதிகளில் பயணம் மேற்கொள்ள இருக்கிறார். மேலும் பார்க்க

மணிப்பூரில் இருவர் எரித்துக் கொலை! 6 பேர் மாயம்

மணிப்பூரில் மைதேயி இனத்தைச் சேர்ந்த முதியவர்கள் இருவர் உயிருடன் எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளனர். மேலும் பார்க்க