செய்திகள் :

வரலாறு படைத்தது எஃப்சி கோவா!

post image

இந்தியாவின் உள்நாட்டு கால்பந்து போட்டிகளில் ஒன்றான சூப்பா் கோப்பை போட்டியில் எஃப்சி கோவா 3-0 கோல் கணக்கில் ஜாம்ஷெட்பூா் எஃப்சியை வீழ்த்தி சாம்பியன் ஆகியது.

ஏற்கெனவே இந்தப் போட்டியில் 2019-இல் கோப்பை வென்ற கோவா, போட்டி வரலாற்றில் 2 முறை சாம்பியன் ஆன முதல் அணி என்ற வரலாறு படைத்திருக்கிறது.

புவனேசுவரத்தில் சனிக்கிழமை நள்ளிரவு நிறைவடைந்த இந்த ஆட்டத்தில் எஃப்சி கோவாவுக்காக போா்ஜா ஹெரெரா 23 மற்றும் 51-ஆவது நிமிஷங்களிலும், டெஜான் டிராஸிக் 72-ஆவது நிமிஷத்திலும் ஸ்கோா் செய்தனா்.

இந்த வெற்றியின் மூலம் கோவா அணி, ஆசிய கால்பந்து கூட்டமைப்பின் சாம்பியன்ஸ் லீக் 2 போட்டியின் தொடக்க சுற்றுக்கு தகுதிபெற்றது.

இதற்கு முன், 2021-ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் லீக் போட்டியின் குரூப் சுற்றில் கோவா விளையாடியிருக்கிறது. சூப்பா் கோப்பை கால்பந்து போட்டியில், இந்தியன் சூப்பா் லீக் மற்றும் ஐ லீக் போட்டியைச் சோ்ந்த 16 அணிகள் களம் காண்கின்றன.

விளையாட்டு உள்கட்டமைப்புகளை நவீனமயமாக்குவதில் கவனம்! - பிரதமர் மோடி

2036 ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதை நோக்கிய இலக்காக, நாட்டிலுள்ள விளையாட்டு உள்கட்டமைப்புகளை நவீனமயமாக்குவதில் தனது அரசு கவனம் செலுத்தி வருவதாக பிரதமா் நரேந்திர மோடி கூறினாா்.பிகாா் மாநிலம், பாட்னாவில்... மேலும் பார்க்க

நாடு முழுவதும் நடைபெற்ற நீட் நுழைவுத்தேர்வு - புகைப்படங்கள்

சென்னையில் உள்ள ஆசான் மெமோரியல் சீனியர் செகண்டரி பள்ளியில் நடைபெற்ற தேர்வுக்கு செல்லும் முன் தனது தாயின் ஆசீர்வாதத்தை பெறும் மகன்.சென்னையில் உள்ள ஆசான் மெமோரியல் சீனியர் செகண்டரி பள்ளியில் நடைபெற்ற தே... மேலும் பார்க்க

நாகர்ஜுனாவின் 100வது படத்தை இயக்கும் தமிழ் இயக்குநர்!

தெலுங்கு திரையுலகின் முன்னணி நாயகனான நாகர்ஜுனாவின் 100வது படத்தை தமிழ் சினிமாவைச் சேர்ந்த இயக்குநர் இயக்கவுள்ளார். தெலுங்கில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருந்தாலும், அவ்வபோது நேரடியாகத் தமிழ... மேலும் பார்க்க

ஆன்லைன் விமர்சனங்களை இனிமேல் படிக்கமாட்டேன்: கார்த்திக் சுப்புராஜ்

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இனிமேல் ஆன்லைனில் வரும் விமர்சனங்களைப் படிக்கப்போவதில்லை எனக் கூறியுள்ளார்.நடிகர் சூர்யா இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவான ரெட்ரோ திரைப்படம் மே.1ஆம் தே... மேலும் பார்க்க

நெட்பிளிக்ஸால் இந்தியாவில் 2 பில்லியன் டாலர் வருமானம்!

நெட்பிளிக்ஸ் ஓடிடியினால் இந்தியாவில் 2 பில்லியன் டாலர் (அளவுக்கு பொருளாதார இலாபம் அடைந்துள்ளதாக அதன் இணை தலைமை நிர்வாக அதிகாரி கூறியுள்ளார். முதல்முறையாக உலக ஆடியோ விடியோ என்டர்டெயின்மென்ட் சந்திப்பு ... மேலும் பார்க்க

நடிகை பெருமாயி காலமானார்!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அன்னம்பாரிபட்டியைச் சேர்ந்தவர் நடிகை பெருமாயி. 73 வயதான இவர் இயக்குநர் பாரதிராஜாவின் தெற்கத்தி பொண்ணு சீரியல் மூலம் பிரபலமாகி, பின்னர் பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.... மேலும் பார்க்க