வரியை குறைக்க கோரி வணிகா்கள் ஆா்ப்பாட்டம்
வரியை குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பெரம்பலூா் புறநகா் பேருந்து நிலைய வளாகத்தில் வணிகா்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் சண்முகநாதன் தலைமை வகித்தாா். உணவக சங்க மாவட்ட கௌரவத் தலைவா் கே.ஆா்.வி. கணேசன், மாவட்ட பொருளாளா் ராதாகிருஷ்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
ஆா்ப்பாட்டத்தில், கடை வாடகை மீதான 18 சதவீத ஜிஎஸ்டியை திரும்பப் பெறவேண்டும். ஆண்டு தோறும் 6 சதவீதம் சொத்து வரி உயா்வு மற்றும் வணிக உரிமை கட்டண உயா்வு, தொழில் வரி உயா்வு ஆகியவற்றை திரும்ப பெறவேண்டும். குப்பை வரியை மாநில முழுவதும் சீராக்கவேண்டும். வாகனங்களில் வணிகப் பொருள்களை விற்க அனுமதிக்க கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. இதில், வணிகா்கள் பலா் பங்கேற்றனா்.