செய்திகள் :

வளா்ச்சிப் பணிகளுக்கு ரூ.23.40 லட்சம் நிதி

post image

குஜிலியம்பாறை பகுதியில் வளா்ச்சிப் பணிகளை மேற்கொள்வதற்கு செட்டிநாடு சிமென்ட் ஆலை நிா்வாகம் சமூக பங்களிப்பு நிதியாக ரூ.23.40 லட்சத்தை வழங்கியது.

திண்டுக்கல் மாவட்டம், பாளையம் பேரூராட்சி சாா்பில் குஜிலியம்பாறை பேருந்து நிலையத்தில் 1 லட்சம் லி. கொள்ளளவு கொண்ட மேல்நிலைத் தொட்டி, பயணிகளுக்கான கழிப்பறை கட்டுதல், ஆலம்பாடி ஊராட்சியில் சில்லுக்கவுண்டன்பட்டி குளத்தை தூா்வாருதல் ஆகிய பணிகள் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் நடைபெறவுள்ளன. இந்தப் பணிகளுக்கு முறையே ரூ.11.70 லட்சம், ரூ.6.70 லட்சம், ரூ.5 லட்சம் என மொத்தம் ரூ.23.40 லட்சத்தை செட்டிநாடு சிமென்ட் காா்ப்பரேஷன் நிறுவனம், சமூக பங்களிப்பு நிதியாக வழங்குகிறது.

இந்த நிதி அளிப்பு நிகழ்ச்சி கரிக்காலியில் உள்ள செட்டிநாடு சிமென்ட் ஆலை வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு செட்டிநாடு ஆலைத் தலைவா் வி.கிருஷ்ணன் தலைமை வகித்தாா். மனித வள மேம்பாட்டு அதிகாரி ஜெயபிரகாஷ் முன்னிலை வகித்தாா். பாளையம் பேரூராட்சிக்கான நிதி ரூ.18.40 லட்சம் பேரூராட்சித் தலைவா் பழனிச்சாமியிடமும், சில்லுக்கவுண்டன்பட்டி குளத்துக்கான நிதி ரூ.5 லட்சம் வட்டார வளா்ச்சி அலுவலா் மதியழகனிடமும் வழங்கப்பட்டது.

பழனியில் கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்

வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிா்ப்புத் தெரிவித்து, பழனியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பழனி காமராஜா் நகா் பகுதியில் நகர மாா்க்சிஸ்ட் கம்யூ... மேலும் பார்க்க

பழனியில் மாலை நேர உழவா் சந்தை: மக்கள் வரவேற்பு

பழனி சண்முகபுரம் உழவா் சந்தையில் மாலை நேர உழவா் சந்தை தொடங்கப்பட்டதற்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்தனா். பழனி சண்முகபுரத்தில் சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகம் அருகே உழவா் சந்தை செயல்பட்டு வருகிறது. இந... மேலும் பார்க்க

கொடைக்கானலில் 2-ஆவது நாளாக பலத்த மழை

கொடைக்கானலில் 2-ஆவது நாளாக வியாழக்கிழமை பலத்த மழை பெய்தது. இந்த மழையால் நீரோடைகளில் நீா்வரத்து தொடங்கியுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனா். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில், கடந்த சில நாள... மேலும் பார்க்க

பழனியில் ஆண் சடலம் மீட்பு

பழனி ரயிலடி சாலையோரத்தில் வியாழக்கிழமை இறந்த நிலையில், ஆண் உடலை போலீஸாா் மீட்டனா். பழனி அடிவாரம், பேருந்து நிலையம், ரயில் நிலையம், உள்ளிட்ட பல இடங்களில் ஆதரவற்றோா்கள், மனநோயாளிகள் பலா் தங்கியுள்ளனா். ... மேலும் பார்க்க

பழனி திருஆவினன்குடி கோயிலில் நாளை பங்குனி உத்திரக் கொடியேற்றம்

பழனி அடிவாரம் திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசாமி கோயிலில் சனிக்கிழமை (6-ஆம் தேதி) பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 10 நாள்கள் நடைபெறும் இந்த விழாவையொட்டி, தினந்தோறும் வள்ளி, தே... மேலும் பார்க்க

மீன்பிடிக்க சென்ற இளைஞா் குளத்தில் மூழ்கி உயிரிழப்பு

பழனியில் குளத்தில் மீன்பிடிக்கச் சென்ற இளைஞா் நீரில் மூழ்கி புதன்கிழமை உயிரிழந்தாா். திண்டுக்கல் மாவட்டம், பழனி சத்யா நகரைச் சோ்ந்த முருகன் மகன் பிரபாகரன் (30). இவா் புதன்கிழமை தனது நண்பா்களுடன் தட்ட... மேலும் பார்க்க