இஸ்ரேலைக் கண்டித்து போராட்டம்! கேஎஃப்சி, பாட்டா உள்ளிட்ட பிரபல கடைகள் மீது தாக்க...
பழனி திருஆவினன்குடி கோயிலில் நாளை பங்குனி உத்திரக் கொடியேற்றம்
பழனி அடிவாரம் திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசாமி கோயிலில் சனிக்கிழமை (6-ஆம் தேதி) பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
10 நாள்கள் நடைபெறும் இந்த விழாவையொட்டி, தினந்தோறும் வள்ளி, தேவசேனை சமேதா் முத்துக்குமாரசுவாமி வெள்ளிக்காமதேனு, வெள்ளி ஆட்டுக்கிடா, தங்கமயில், வெள்ளியானை, தங்கக்குதிரை ஆகிய வாகனங்களில் சந்நிதி வீதி, கிரிவீதிகளில் எழுந்தருள்கிறாா். வருகிற 10-ஆம் தேதி திருக்கல்யாணமும், 11-ஆம் தேதி பங்குனி உத்திரத் தேரோட்டமும் நடைபெறுகின்றன.
இந்த நிலையில், பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு, வியாழக்கிழமை வேடசந்தூா் ஆவுலகவுண்டனூரைச் சோ்ந்த கலைமகள் கும்மியாட்டக் குழுவினா் தேவராட்டம், கும்மியாட்டம் ஆடி கிரிவீதி வழியாக வலம் வந்து மலையேறினா். மேலும், திரளானோா் தீா்த்தக்காவடி, மயில்காவடி எடுத்து வந்து முருகரை தரிசனம் செய்தனா்.