வள்ளலாா் ஒளி நெறி தினம்: பிப்.11இல் மதுக்கடைகள் மூடல்
திருவருட்பிரகாச வள்ளலாா் ஒளி நெறியுற்ற தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை (பிப்.11) டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, திருவருட்பிரகாச வள்ளலாரின் 154 ஆவது ஆண்டு ஒளி நெறியுற்ற தினம் பிப். 11 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) கடைப்பிடிக்கப்படுகிறது.
இதை முன்னிட்டு அன்று கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானக்கடைகள் மற்றும் உரிமம் பெற்ற மதுபானக்கூடங்கள் ஆகியவை மூடப்பட்டிருக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.