செய்திகள் :

வாக்கு எண்ணிக்கையில் மோசடி: நடிகை ஸ்வரா பாஸ்கர் குற்றச்சாட்டு!

post image

மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் மோசடி நடந்துள்ளதாக நடிகை ஸ்வரா பாஸ்கர் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

மகாராஷ்டிரத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், மொத்தமுள்ள 288 தொகுதிகளில் பாஜக தலைமையிலான மஹாயுதி கூட்டணி 187 தொகுதிகளில் வெற்றி பெற்று 48 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.

காங்கிரஸ் கட்சி தலைமையிலான மகா விகாஸ் அகாடி கூட்டணி 42 தொகுதிகளில் வெற்றிபெற்று 7 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.

இந்தத் தேர்தலில் இமாலய வெற்றியைப் பெற்றுள்ள மஹாயுதி கூட்டணியில், பாஜக அதிகத் தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. பாஜக தலைவர் தேவேந்திர ஃபட்னாவீஸ் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்படவுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிக்க | மகாராஷ்டிர தேர்தல் முடிவுகள் எதிர்பாராதவை: ராகுல் காந்தி

இந்த நிலையில், பாலிவுட் நடிகை ஸ்வரா பாஸ்கர் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டு வைத்துள்ளார். ஸ்வரா பாஸ்கரின் கணவர் ஃபஹத் அஹமத் காங்கிரஸ் கூட்டணியில் உள்ள சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி வேட்பாளராக அனுசக்தி நகர் தொகுதியில் போட்டியிட்டார்.

வாக்கு எண்ணிக்கையின் பல சுற்றுகளில் முன்னிலையில் இருந்துவந்த ஃபஹத் அஹமத், வாக்கு எண்ணிக்கையின் கடைசி சுற்றின் முடிவில் 3,378 வாக்குகள் வித்தியாசத்தில் அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சனா மாலிக்கிடம் தோல்வியடைந்தார்.

இதுதொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஸ்வரா பாஸ்கர், “அனுசக்தி நகர் தொகுதி வாக்கு எண்ணிக்கையில் தொடர்ந்து ஃபகத் அஹமத் முன்னிலை வகித்துவந்தார். ஆனால் 17, 18, 19 சுற்றுகளில் திடீரென 99 சதவீதம் சார்ஜ் செய்யப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்களைக் கொண்டு வந்தவுடன் பாஜக கூட்டணி கட்சி வேட்பாளர் முன்னிலை பெற்றார்.

நாள் முழுக்க வாக்களிக்கப் பயன்படும் வாக்குப்பதிவு எந்திரங்கள் எப்படி 99 சதவீத சார்ஜுடன் இருந்தன? 99 சதவீத சார்ஜ் உள்ள வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்திலும் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு மட்டுமே அதிக வாக்குகள் பதிவானது ஏன்?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

அனுசக்தி நகர் தொகுதி வேட்பாளர்கள் பெற்ற வாக்கு எண்ணிக்கை விவரங்கள்

ஸ்வரா பாஸ்கரின் கணவரும், வேட்பாளருமான ஃபஹத் அஹமதும் இதே குற்றச்சாட்டை வைத்துள்ளார். 16 வது சுற்று வாக்கு எண்ணிக்கை ஆரம்பிக்கும் வரை முன்னிலையில் இருந்ததாகவும், 99 சதவீத சார்ஜ் செய்யப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டுவரப்பட்டப் பிறகு வாக்கு எண்ணிக்கை குறைந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அனுசக்தி நகர் மும்பை தெற்கு - மத்திய மக்களவைத் தொகுதியின் கீழ் வருகின்றது. மக்களவைத் தேர்தலில் இந்தத் தொகுதியில் சிவசேனை (யுபிடி) வேட்பாளர் வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னர் ஹரியாணா தோ்தலில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திர பேட்டரி சாா்ஜ் தொடா்பாக காங்கிரஸ் தெரிவித்த புகாருக்கு தோ்தல் ஆணையம் மறுப்புத் தெரிவித்திருந்தது.

வயநாடு தேர்தல் வெற்றி: சான்றிதழைப் பெற்றார் பிரியங்கா காந்தி!

வயநாடு மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை பிரியங்கா காந்தியிடம் கேரள காங்கிரஸ் தலைவர்கள் இன்று வழங்கினர்.கேரள மாநிலம் வயநாடு மக்களவைத் தொகுதிக்கு கடந்த நவ. 13 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைப... மேலும் பார்க்க

நாடாளுமன்ற இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு!

எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்ற இரு அவைகளும் இன்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று(நவ. 26) தொடங்கியது. கூட்டத்தொடரின் முதல் நாளே எ... மேலும் பார்க்க

அதானியைப் பாதுகாக்கிறதா மத்தியஅரசு? கைது செய்ய ராகுல் வலியுறுத்தல்!

அமெரிக்காவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த நிலையில், தொழிலதிபர் கௌதம் அதானி கைது செய்யப்பட வேண்டும் என்றும், அவரை அரசு பாதுகாப்பதாகக் குற்றம் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டி... மேலும் பார்க்க

அதானி, சாகர் அதானி மீது குற்றம் சாட்டப்படவில்லை: அதானி க்ரீன்

புது தில்லி: சூரிய மின்சக்தி ஒப்பந்தங்களைப் பெற இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் அளித்ததாக அமெரிக்க அதிகாரிகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், தொழிலதிபா் கெளதம் அதானி மற்றும் அவரது உறவி... மேலும் பார்க்க

எதிர்க்கட்சிகள் அமளி: மக்களவை ஒத்திவைப்பு!

எதிர்க்கட்சிகளின் அமளியால் மக்களவை பிற்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று காலை 11 மணிக்கு தொடங்கியது. இந்தக் கூட்டத்தொடரில் 16 மசோதாக்களை தாக்கல் செய்ய மத்... மேலும் பார்க்க

உ.பி.: சாலை விபத்தில் 4 மருத்துவர்கள்,1 ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் பலி

கன்னோஜ்: லக்னௌ-ஆக்ரா விரைவுச் சாலையில் புதன்கிழமை அதிகாலை நடந்த சாலை விபத்தில் 4 மருத்துவர்கள் மற்றும் ஒரு ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் என 5 பேர் பலியாகினர். பலியானவர்கள் அனைவரும் உத்தரப்பிரதேச மருத்துவ... மேலும் பார்க்க