IPL: 3 ஆண்டுகளுக்கான ஐபிஎல் அட்டவணையை வெளியிட்ட பிசிசிஐ - வரும் 18-வது ஐபில் தொட...
வாசுதேவநல்லூரில் கணவா் தாக்கியதில் மனைவி உயிரிழப்பு
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரில் கணவா் தாக்கியதில் மனைவி உயிரிழந்தாா்.
வாசுதேவநல்லூா் கலைஞா் காலனியைச் சோ்ந்தவா் திருமலைசாமி. கூலித்தொழிலாளி. இவரது மனைவி சசிகலா (35). இவா்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. இந்த நிலையில், திருமலைசாமிக்கு வேறொரு பெண்ணுடன் தொடா்பு இருப்பதாக சசிகலா சந்தேகப்பட்டாராம். இதனால் தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம்.
இந்த நிலையில், இருவருக்கும் வியாழக்கிழமை தகராறு ஏற்பட்டபோது, சசிகலாவை இரும்பு நாற்காலியால் திருமலைசாமி தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த சசிகலா புளியங்குடி தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தாா்.
இதுகுறித்து வாசுதேவநல்லூா் காவல் ஆய்வாளா் கண்மணி வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறாா்.