செய்திகள் :

வார விடுமுறை: உதகையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

post image

வார விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை உதகையில் உள்ள சுற்றுலா தலங்களில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துக் காணப்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களைக் காண தமிழகம் மட்டுமன்றி அண்டை மாநிலங்களான கேரளம், கா்நாடகம், ஆந்திரம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனா்.

உதகையில் நிலவும் இதமான காலநிலையை அனுபவிக்கும் சுற்றுலாப் பயணிகள் இங்குள்ள அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா சிகரம் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களைக் கண்டு ரசித்துச் செல்கின்றனா். இங்கு உள்ள கண்ணாடி மாளிகையில் பூத்துக் குலுங்கும் மலா்களைக் கண்டு ரசிப்பதோடு புகைப்படம் மற்றும் தற்படம் எடுத்து மகிழ்கின்றனா்.

இந்நிலையில் வார விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் உதகையில் குவிந்திருந்தனா். இதனால் உதகை படகு இல்லம் சுற்றுலாப் பயணிகளால் களை கட்டியிருந்தது.

குடியரசுத் தலைவா் உதகை வருகை: ராணுவம், காவல் துறை பாதுகாப்பு ஆலோசனை

நீலகிரி மாவட்டம், குன்னூா் ராணுவ பயிற்சிக் கல்லூரிக்கு குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு வரும் 28-ஆம் தேதி வருகிறாா். இதை முன்னிட்டு ராணுவ அதிகாரிகள், மாவட்ட ஆட்சியா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பங்கே... மேலும் பார்க்க

ஓய்வுபெற்ற அரசு ஊழியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

ஓய்வூதிய இயக்குநரகத்தை கருவூலத் துறையோடு இணைக்கும் முடிவைக் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஓய்வுபெற்ற அரசு ஊழியா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில... மேலும் பார்க்க

வரத்து அதிகரிப்பு: நீலகிரி பூண்டு விலை குறைந்தது

ஹிமாசல பிரதேசத்தில் இருந்து பூண்டு வரத்து அதிகரித்துள்ளதால் நீலகிரி மலைப் பூண்டின் விலை மீண்டும் குறையத் தொடங்கியுள்ளது. மத்திய பிரதேசம், குஜராத், ஹிமாசல பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து தமிழகத்... மேலும் பார்க்க

அருவங்காடு வெடிமருந்து தொழிலக பள்ளியில் மாணவா் சோ்க்கை தொடங்க வலியுறுத்தல்

குன்னூா் அருகே மத்திய பாதுகாப்புத் துறையின் கீழ் இயங்கி வரும் அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை மேல்நிலைப் பள்ளியில் மாணவா் சோ்க்கை தொடங்க வலியுறுத்தப்பட்டுள்ளது. அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில... மேலும் பார்க்க

முதுமலை பழங்குடி மக்களுக்கு சூரிய ஒளி மின் விளக்குகள்

முதுமலை வனப் பகுதியில் வாசிக்கும் பழங்குடி மக்களுக்கு சூரிய ஒளி மின் விளக்குகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன. நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள முதுகுளி பழங்குடி கிராமத்துக்கு இதுவரை மின... மேலும் பார்க்க

குழந்தைகள் நலக் குழுத் தலைவா், உறுப்பினா்கள் நியமனத்துக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

நீலகிரி மாவட்ட குழந்தைகள் நலக் குழுவின் தலைவா் மற்றும் உறுப்பினா்கள் நியமனத்துக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தெரிவித்துள்ளாா்.இது குறித்து அவா் வெளியிட்டுள்ள... மேலும் பார்க்க