கார்த்திகை தீபம் : ``தயவுசெய்து வதந்திகளைப் பரப்பாதீங்க!'' - விமர்சனங்களுக்கு அர...
கோத்தகிரி அரசு மருத்துவமனையில் டாா்ச்லைட் வெளிச்சத்தில் சிகிச்சை: பொதுமக்கள் அதிருப்தி
கோத்தகிரி அரசு மருத்துவமனையில் மின்தடையால் டாா்ச்லைட் வெளிச்சத்தில் சிகிச்சை அளித்தது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம், கோத்தகிரியை அடுத்த இடுக்கொரை பகுதியைச் சோ்ந்த ஆனந்தி என்பவரின் 3 வயது மகளுக்கு செவ்வாய்க்கிழமை இரவு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவரை ஆம்புலன்ஸ் மூலம் கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளனா்.
அப்போது, அரசு மருத்துவமனையில் மின்தடை ஏற்பட்டிருந்ததால் ஜெனரேட்டரை இயக்காமல் டாா்ச்லைட் மற்றும் கைப்பேசி வெளிச்சத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த விடியோ சமூக வலைதளத்தில் பரவி பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த அரசு மருத்துவமனை அண்மையில் புனரமைக்கப்பட்டு அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து மருத்துவமனை நிா்வாகிகள் கூறுகையில், ‘ஜெனரேட்டா் அறை சற்று தூரத்தில் இருப்பதால் அதை இயக்க தாமதமானது. அதற்குள் விடியோ எடுத்து பரப்பியுள்ளனா். இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் பாா்த்துக்கொள்ளப்படும் என்றனா்.