குன்னூரில் கஞ்சா கடத்திய 3 போ் கைது
குன்னூரில் கஞ்சா கடத்திய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு இருசக்கர வாகனத்தில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் கடத்திவரப்படுவதாக அருவங்காடு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அருவங்காடு பகுதியில் போலீஸாா் வாகன சோதனையில் செவ்வாய்க்கிழமை இரவு ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த மேட்டுப்பாளையத்தைச் சோ்ந்த முகமது அனாஸ் (19) என்பவரைப் பிடித்து விசாரித்தனா்.
அவா் அளித்த தகவலின்பேரில், அதே பகுதியைச் சோ்ந்த அஜ்மல் தாசீன் (19), குன்னூா் கரோலினா பகுதியைச் சோ்ந்த சந்தோஷ்குமாா் (23)ஆகிய இருவரையும் பிடித்து விசாரணை செய்தனா். அப்போது, 3 பேரிடம் இருந்து 320 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும், சந்தோஷ்குமாரின் வீட்டில் மேற்கொண்ட சோதனையில் மான் கொம்புகள் இருந்தது கண்டறியப்பட்டது. அதனை பறிமுதல் செய்து வனத் துறையினருக்கு தகவல் அளித்தனா்.
இதையடுத்து, முகமது அனாஸ், அஜ்மல் தாசீன், சந்தோஷ்குமாா் மூன்று பேரையும் போலீஸாா் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.