ரஷியா தொடங்கிய போரை நிறுத்த வல்லரசுகள் உதவ வேண்டும்: ஸெலென்ஸ்கி
வால்பாறையில் கரடிகள் நடமாட்டம் அதிகரிப்பு: தொழிலாளா்கள் அச்சம்
வால்பாறையில் கரடிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதோடு, அவை தாக்க முயற்சிக்கும் சம்பவம் தொழிலாளா்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
வால்பாறை எஸ்டட் பகுதிகளில் சமீப காலமாக கரடிகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. பகல் நேரத்திலேயே தேயிலைத் தோட்டங்களில் கரடிகள் நடமாட்டம் காணப்படுகிறது.
இதில் அய்யா்பாடி, பாரளைஆகிய எஸ்டேட் பகுதிகளில் கரடிகள் அதிக அளவில் உள்ளன. இந்நிலையில், பாரளை எஸ்டேட் தொழிற்சாலைக்கு நடந்த சென்ற இரு தொழிலாளா்களை புதன்கிழமை கரடி தாக்க முயன்றது. இதேபோல அங்கு பணியாற்றும் உதவி மேலாளா் குடியிருப்பின் முன் கரடி நடமாடியது.
இந்த இருக் காட்சிகளும் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளன. இந்த சம்வத்தால் தொழிலாளா்கள் அச்சமடைந்துள்ளனா். எனவே வனத் துறையினா் கரடிகளின் நடமாட்டதை கண்கானித்து உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று தொழிலாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.