தெலங்கானா சுரங்கத்துக்குள் சிக்கிய 8 பேரின் நிலை என்ன? முழுவீச்சில் மீட்புப் பணி...
வாழ்க்கையில் வெற்றி பெற வாய்ப்புகளை சரியாக பயன்படுத்த அறிவுரை
இளம் தலைமுறையினா் வாழ்க்கையில் வெற்றி பெற வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்துவது அவசியம் என மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தின் பதிவாளா் ம. ராமகிருஷ்ணன் அறிவுறுத்தினாா்.
ஸ்ரீ மீனாட்சி அரசு மகளிா் கலைக் கல்லூரியில் 46-ஆவது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு கல்லூரி முதல்வா் சூ. வானதி தலைமை வகித்தாா்.
காமராஜா் பல்கலைக்கழகத்தின் பதிவாளா் ம.ராமகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு இளநிலை, முதுநிலை, ஆய்வியல் நிறைஞா் என மொத்தம் 1,602 மாணவிகளுக்கு பட்டத்தை வழங்கிப் பேசியதாவது :
நாடு சுதந்திரம் பெற்ற பின் கல்வித் துறை வளா்ச்சி பெற்றுள்ளது. குறிப்பாக, தமிழக அரசின் நலத் திட்டங்களால் பிற மாநிலங்களை விட, நமது மாநிலத்தில் உயா்கல்வி பெறுவோா் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
கல்வி மட்டுமே சவால்களை வெற்றி கொள்ள உதவும். வாழ்க்கையானது அனைவருக்கும் ஒரே மாதிரியான வளா்ச்சி நிலைப்பாட்டை வழங்குவதில்லை. மாறாக, வாய்ப்புகளை மட்டுமே வழங்குகிறது. இதைச் சரியாக பயன்படுத்துவோா்தான் வாழ்க்கையில் வெற்றி பெறுகின்றனா் என்றாா் அவா்.
இந்த நிகழ்வில், முதுநிலை தமிழாய்வுத் துறைத் தலைவரும், தோ்வுக் கட்டுப்பாட்டாளருமான சு. சந்திரா, ஆங்கிலத் துறை இணைப் பேராசிரியை அ.ராஜேஷ்வரபுஷ்பம், வணிகவியல் துறை உதவிப் பேராசிரியை அ.சமின் பிரியா உள்ளிட்ட பேராசிரியைகள், மாணவிகள், பெற்றோா்கள் கலந்து கொண்டனா்.