செய்திகள் :

வாழ்க்கையும் கிரிக்கெட்டும் ஒன்றுதான்..! வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற கிளார்க் நெகிழ்ச்சி!

post image

உலகக் கோப்பையை வென்ற முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் 64ஆவது நபராக ஆஸி. வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றது குறிப்பிடத்தக்கது.

பந்து தலைக்கு பட்டு இறந்துபோன பிலிப்ஸ் ஹக் கிளார்க்கின் உற்ற நண்பர். அவரது இறப்புக்குப் பிறகு அடுத்த நாள் இந்தியாவுடன் நடந்த டெஸ்ட்டில் சதமடித்து “எனது சிறிய சகோதரர்க்கு சமர்ப்பணம்” எனக் கூறி கிரிக்கெட் ரசிகர்கள் ரசிகர்கள் அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்தார்.

2015 ஆஷஸ் தொடருக்கு பின்பு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.

12 வருட கிரிக்கெட் வாழ்க்கையில் டெஸ்ட்டில் 8,643 ரன்கள், ஒருநாள் போட்டிகளில் 7,981 ரன்களும் எடுத்துள்ளார். டெஸ்ட்டில் 49.10, ஒருநாள் போட்டிகளில் 44.58 சராசரி வைத்துள்ளார்.

இந்த நிலையில் வாழ்நாள் சாதனையாளர் விருது குறித்து கிளார்க் பேசியதாவது:

வாழ்க்கையும் கிரிக்கெட்டும் ஒன்றே

நான் சிறுவயதில் இருந்து பார்த்து வியந்த முன்னோடிகள், ரோல் மாடல்கள், அற்புதமான வீரர்கள் வரிசையில் நானும் இந்த விருதுபெறுவது மிகவும் கௌரமாக கருதுகிறேன்.

ஓய்வு நம்மை என்னவெல்லாமோ செய்ய வைக்கிறது. கிரிக்கெட்டை பார்ப்பது மட்டுமே இப்போது முடிகிறது. நமது சிறந்த கிரிக்கெட்டை விளையாடி மக்கள் நம்மைப் புகழ்ந்து பேசுவது எல்லாம் எனக்கு 6 வயதிலேயே தொடங்கியது.

34 வயதில் ஓய்வை அறிவித்தேன். கிரிக்கெட் என்னுடைய வாழ்வாக இருந்தது. அது இன்னமும் எனது வாழ்க்கையில் ஒரு அங்கமாக இருக்கிறது.

கிரிக்கெட் என்பது பொதுவாக நமது வாழ்க்கையுடன் சம்பந்தப்பட்ட ஒன்றாகவே இருக்கிறது. களத்துக்கு சென்று சதமடிப்பது பின்னர் பேட்டினை உயர்த்துவது, பின்னர் ஃபீல்டிங்கில் சென்று 2ஆவது பந்திலேயே கேட்ச்சினை தவறவிடுவது என வாழ்க்கையும் அப்படித்தான் இருக்கிறது என்றார்.

ரஞ்சி கோப்பையில் பேட்ஸ்மேன்கள் சொதப்பல்; ஜடேஜா அசத்தல்!

ரஞ்சி கோப்பையில் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், ரவீந்திர ஜடேஜா அபார பந்துவீச்சை வெளிப்படுத்தியுள்ளார்.பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்... மேலும் பார்க்க

ரோஹித் சர்மாவின் விக்கெட்டை கொண்டாடாத பந்துவீச்சாளர்; காரணம் என்ன?

ரஞ்சி கோப்பையில் ரோஹித் சர்மாவின் விக்கெட்டினை வீழ்த்திய பிறகு, அதனைக் கொண்டாடாததற்கான காரணத்தை பந்துவீச்சாளர் தெரிவித்துள்ளார்.பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதைத் தொட... மேலும் பார்க்க

வருண் சக்கரவர்த்திக்கு அபிஷேக் சர்மா பாராட்டு!

இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் வருண் சக்கரவர்த்தியை தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா பாராட்டியுள்ளார்.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் நேற்று (ஜனவரி 22) தொடங்கியது. கொல்க... மேலும் பார்க்க

இங்கிலாந்தை வீழ்த்தி ஆஷஸ் தொடரை வென்ற ஆஸ்திரேலியா!

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி இன்று (ஜனவரி 23) நடைபெ... மேலும் பார்க்க

தோல்விக்கு காரணம் என்ன? விளக்கமளித்த ஜோஸ் பட்லர்!

இங்கிலாந்து அணியின் தோல்விக்கான காரணம் குறித்து அந்த அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் பேசியுள்ளார்.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் நேற்று (ஜனவரி 22) தொடங்கியது. கொல்கத்தாவின் ஈடன... மேலும் பார்க்க

மகளிர் உலகக் கோப்பை: இலங்கையை வீழ்த்தி சூப்பர் 6 சுற்றுக்கு இந்தியா தகுதி!

மகளிர் உலகக் கோப்பை போட்டியில் இலங்கையை 60 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி சூப்பர் 6 சுற்றுக்கு தகுதி பெற்றது.19 வயதுட்பட்டோருக்கான ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றையப... மேலும் பார்க்க