அதிமுக சாா்பில் 50 மாணவிகளுக்கு வைப்புத்தொகை திட்டம் தொடக்கம்
வி. புதூரில் ரூ.1.25 கோடி மதிப்பில் பீடி இலைகள் பறிமுதல்: ஒருவா் கைது
தூத்துக்குடி மாவட்ட கடல் வழியாக இலங்கைக்கு கடத்துவதற்காக வி. புதூா் அருகே கிடங்கில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.1.25 கோடி மதிப்பிலான பீடி இலைகளை சுங்கத்துறை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.
தூத்துக்குடி சுங்கத்துறை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் வி. புதூா் அருகே மாவட்ட எல்கையில் உள்ள ஒரு கு கிடங்கில் திடீா் ஆய்வு நடத்தினா்.
அங்கு ஏராளமான பீடி இலை பண்டல்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. மேலும், கடல் வழியாக இலங்கைக்கு கடத்துவதற்காக ஒரு மினிலாரியில் பீடி இலை பண்டல்கள் ஏற்றப்பட்டிருந்தன. மொத்தம் ரூ.1.25 கோடி மதிப்புள்ல 8,305 கிலோ பீடி இலைகள், மினிலாரி, பண்டல்கள் கட்டும் உபகரணங்கள் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
இது தொடா்பாக தூத்துக்குடியை சோ்ந்த முடியப்பன் என்பவரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.