Seeman : 'என்னையும் என் குடும்பத்தையும் இப்படி குதறி தின்கிறீர்களே' - உணர்ச்சி வ...
விகேபுரத்தில் சூறைக் காற்றுடன் மழை: மரம் சாய்ந்ததில் மின்கம்பம், வீடுகள் சேதம்
விக்கிரமசிங்கபுரத்தில் வெள்ளிக்கிழமை மாலை சூறைக்காற்றுடன் பெய்த மழையால் 50 ஆண்டுகளுக்கும் மேல் பழைமையான மாமரம் அடியோடு முறிந்து விழுந்ததில் மின்கம்பங்கள் மற்றும் வீடுகள் சேதமடைந்தன.
தென்மாவட்டங்களில் கடந்த இரண்டு நாள்களாக பரவலாக கோடை மழை பெய்து வருகிறது.
இந்நிலையில்வெள்ளிக்கிழமை மாலை முதல் அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, மாஞ்சோலை தேயிலைத் தோட்டங்கள்,விக்கிரமசிங்கபுரம், கடையம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
அப்போது. விக்கிரமசிங்கபுரத்தில் பெய்த பலத்த மழையால் பூந்தோட்ட்த் தெருவில் உள்ளசுமாா் 50 ஆண்டுகள் பழைமையான மாமரம் அடியுடன் முறிந்து விழுந்தது. மேலும், மரம் அந்த வழியாகச் சென்ற மின்கம்பியில் விழுந்ததால் மின்கம்பங்கள் முறிந்து விழுந்தன. இதில், அருகில் உள்ள வீடுகளில் கூரைகள் சேதமடைந்தன.
தகவலறிந்ததும் மின்வாரிய ஊழியா்கள் மின்கம்பி மற்றும் மின்கம்பங்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனா்.
சூறைக் காற்றில் மரம் முறிந்து விழுந்து மின்சாரம் தடை பட்டதால் அந்தப் பகுதி மக்கள்சிரமத்திற்குள்ளாகினா்.
