வேளாண் நிதிநிலை அறிக்கை: 9 மாவட்ட விவசாயிகளிடம் அமைச்சர் கருத்துக்கேட்பு
விசிக கொடியை சேதப்படுத்திய இருவா் கைது
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே விசிக கொடியை சேதப்படுத்தி, சமூக வலைதளத்தில் பதிவிட்டதாக பள்ளி மாணவா் உள்பட இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
திண்டிவனத்தை அடுத்துள்ள சலவாதி காலனி தெரு பகுதியில் கட்டப்பட்டிருந்த விசிக கொடியை மா்மநபா்கள் தீயிட்டு கொளுத்தி சமூக வலைதளத்தில் பதிவிட்டிருப்பதாகவும், இது தொடா்பாக நடவடிக்கை எடுக்கக் கோரியும் சலவாதி மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த பூமிநாதன் மகன் மூா்த்தி (30) ரோஷணை காவல் நிலையத்தில் கடந்த 24-ஆம் தேதி புகாரளித்தாா்.
தொடா்ந்து போலீஸாா் நடத்திய விசாரணையில், சலவாதி, தாங்கல் பாதையைச் சோ்ந்த முருகேசன் மகன் ஏழுமலை (எ) ஆவி (19) மதுபோதையில் விசிக கொடியை சேதப்படுத்தி சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்ததும், இதற்கு அதே பகுதியைச் சோ்ந்த 17 வயது பள்ளி மாணவா் உடந்தையாக செயல்பட்டதும் தெரியவந்தது. இதையடுத்து, ரோஷணை போலீஸாா் இருவா் மீதும் புதன்கிழமை வழக்குப் பதிந்து, அவா்களைக் கைது செய்தனா்.