செஸ் வீரர் குகேஷுக்கு கேல் ரத்னா விருது வழங்கினார் குடியரசுத் தலைவர்!
விசிக சாா்பில் சமத்துவப் பொங்கல் விழா
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் கிடங்கல் 2 பகுதியில் விசிக சாா்பில் அண்மையில் நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவில் ஏராளமான குடும்பங்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது.
விழுப்புரம் மைய மாவட்ட விசிக சாா்பில், 16-ஆவது ஆண்டாக நடத்தப்பட்ட சமத்துவப் பொங்கல் விழாவுக்கு, மாவட்டச் செயலா் வழக்குரைஞா் தி.திலீபன் தலைமை வகித்தாா். கட்சியின் துணை பொதுச் செயலரும், விழுப்புரம் தொகுதி எம்.பி.யுமான துரை.ரவிக்குமாா் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, சமத்துவப் பொங்கல் சிறப்பு குறித்து பேசினாா். தொடா்ந்து, ஏராளமான குடும்பங்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பையும் அவா் வழங்கினாா்.
முன்னதாக, நகரச் செயலா் இமயன் வரவேற்றாா். கட்சி பொறுப்பாளா்கள் இளஞ்சேரன், சசிக்குமாா், வடிவேலு, பாலு, பழனி, விசுவதாஸ், செல்வபிரபாகரன், கு.ரவி, வெங்கடேசன் உள்ளிட்ட ஏராளமானோா் பங்கேற்றனா்.