செய்திகள் :

விஜய் - 69 பெயர் போஸ்டர் அப்டேட்!

post image

நடிகர் விஜய் நடித்துவரும் அவரது 69-வது படத்தின் போஸ்டர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் நடிப்பில் உருவாகும் 69-வது படத்தினை ஹெச். வினோத் இயக்குகிறார். இதுதான் விஜய்யின் கடைசி படம் என்பதால் எதிர்பார்ப்பு மிகுந்துள்ளது.

நடிகர்கள் பாபி தியோல், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, கௌதம் வாசுதேவ மேனன், நரேன், பிரியாமணி, பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இதையும் படிக்க: காஞ்சனா - 4 படத்தில் பேயாக நடிக்கும் பூஜா ஹெக்டே?

தற்போது, படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், இப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் புத்தாண்டை முன்னிட்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பொங்கலுக்கு படத்தின் பெயர் போஸ்டரை வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குளிர்பானத்தை தடை செய்ய மாட்டீர்கள்.. நான் விளம்பரத்தில் நடிக்கக் கூடாதா? வைரலாகும் ஷாருக் கான் பேச்சு

மும்பை: ஷாருக்கான் பேசினாலே சர்ச்சையாகும் என்பது பலருக்கும் தெரிந்திருக்கும், அதுபோலத்தான் அவர் குளிர்பானம் தொடர்பாகப் பேசியிருப்பது போது வைரலாகி வருகிறது.குழந்தைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் குளிர்பானத... மேலும் பார்க்க

சாய் பல்லவியின் சிவசக்தி பாடலின் புரோமோ விடியோ!

நடிகை சாய் பல்லவி நடிப்பில் உருவாகியுள்ள தண்டேல் படத்தின் 2ஆவது பாடலான ஓம் நமோ நமச்சிவாய புரோமோ வெளியானது. நடிகை சாய்பல்லவி 2 ஆண்டுகளுக்குப் பிறகு தெலுங்கு படத்தில் நாக சைதன்யாவுடன் நடிக்கிறார். நாக ச... மேலும் பார்க்க

இந்த வாரம் உங்களுக்கு எப்படி?

தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் இந்த வார (ஜனவரி 3 - 9) பலன்களைத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள்.மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)குடும்பத்தில் இணக... மேலும் பார்க்க

டூரிஸ்ட் ஃபேமிலி படப்பிடிப்பு நிறைவு!

நடிகர் சசிகுமாரின் டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.அயோத்தி, கருடன், நந்தன் என சசிக்குமார் நடிப்பில் சமீபத்தில் தொடர்ச்சியாக வெளியான திரைப்படங... மேலும் பார்க்க

12 ஆண்டுகளுக்குப் பிறகு... மதகஜராஜா ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சுந்தர்.சி இயக்கத்தில், விஷால் நடித்துள்ள படம் மதகஜராஜா படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் விஷால் ஜோடியாக அஞ்சலி, வரலட்சுமி நடித்துள்ளனர். விஜய் ஆன்டணி இசையமைத்துள்ள இந்தப் ப... மேலும் பார்க்க

மேஷம் - மீனம்: தினப்பலன்கள்!

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.03.01.2025மேஷம்:உங்களது காரியங்களுக்கு இருந்த எதிர்ப்புகள் விலகும். பணவரத்து திருப்தி... மேலும் பார்க்க