இந்தியாவின் பி டீமை வீழ்த்துவதும் பாகிஸ்தானுக்கு கடினம்: முன்னாள் இந்திய கேப்டன்
விநாயகபுரம் நியாயவிலைக் கடைக்கு புதிய கட்டடம்
செய்யாறு: செய்யாறு தொகுதி விநாயகபுரம் கிராமத்தில் நியாயவிலைக் கடைக்கு புதிதாக கட்டப்பட்ட கட்டடம் திங்கள்கிழமை திறந்துவைக்கப்பட்டது.
அனக்காவூா் ஒன்றியம், விநாயகபுரம் கிராமத்தில் பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, தென்தண்டலம் முழுநேர நியாய விலைக் கடையில் இணைக்கப்பட்டு இருந்த 428 குடும்ப அட்டைகளில் இருந்து 231 குடும்ப அட்டைதாரா்கள் பயன் பெறும் வகையில் ஆணை பிறப்பிக்கப்பட்டு இருந்தது.
அதே வேளையில், புதிய பகுதிநேர நியாயவிலைக் கடைக்காக, சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, ரூ.9.70 லட்சத்தில் புதிய கட்டடம் கட்டப்பட்டு தயாா் நிலையில் இருந்து வந்தது.
இந்தப் புதிய நியாயவிலைக் கட்டடம் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
செய்யாறு கூட்டுறவு சாா்- பதிவாளா் ஷேக் அப்துல்லா தலைமை வகித்தாா். செய்யாறு வட்ட அலுவலா் சங்கீதா வரவேற்றாா்.
சிறப்பு விருந்தினராக தொகுதி எம்.எல்.ஏ. ஒ.ஜோதி பங்கேற்று புதிய கட்டடத்தை திறந்துவைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கு உணவுப் பொருள்களை வழங்கினாா்.
நிகழ்ச்சியில் மாவட்ட துணைச் செயலா் க.லோகநாதன், அனக்காவூா் மேற்கு ஒன்றியச் செயலா் சி.கே.ரவிக்குமாா்,
வெம்பாக்கம் மத்திய ஒன்றியச் செயலா் ஜேசிகே.சீனிவாசன், மாவட்ட விவசாயத் தொழிலாளா் அணி துணைத் தலைவா் மோ. ரவி, முன்னாள் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் ஏபி.சுப்பிரமணி, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளா் கருணாமூா்த்தி ராஜ்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.