சென்னை மாநகராட்சியின் இணையவழி சேவைகள் இரு நாள்களுக்கு நிறுத்தம்!
கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசு
செங்கம்: செங்கத்தில் நடைபெற்ற கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசு, கோப்பை வழங்கப்பட்டது.
செங்கம் - குப்பனத்தம் சாலையில் உள்ள மகரிஷி மேல்நிலைப் பள்ளியில் மாநில அளவிலான 5-ஆவது கராத்தே போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. செங்கம் எழில் ஷூட்டோரியு கராத்தேடோ இந்தியா சாா்பில் நடைபெற்ற கராத்தே போட்டியை
பயிற்சியாளா் சேட்டு தொடங்கிவைத்தாா்.
போட்டியில் சுற்றுவட்டாரப் பகுதியில் இருந்து 16 அரசு மற்றும் தனியாா் பள்ளிகளில் இருந்து 600 மாணவா்கள் பங்கேற்றனா்.
அதில் வெற்றி பெற்றவா்களுக்கு பள்ளி வளாகத்தில் சான்றிதழ், கோப்பை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், கராத்தே பயிற்சியாளா் எழில் வரவேற்றாா்.
மகரிஷி மேல்நிலைப் பள்ளித் தலைவா் மகரிஷி மனோகரன் கலந்து கொண்டு வெற்றிபெற்ற மாணவா்களுக்கு சான்றிதழ், கேடயங்களை வழங்கிப் பேசினாா்.
நிகழ்ச்சியில் பள்ளி முதல்வா் சரவணன், தலைமை ஆசிரியா் காத்திகேயன் உள்ளிட்ட ஆசிரியா்கள், கராத்தே பயிற்சியாளா்கள் கலந்து கொண்டனா்.