செய்திகள் :

மக்கள் குறைதீா் கூட்டத்தில் 885 மனுக்கள்

post image

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில், பொதுமக்களிடம் இருந்து 885 கோரிக்கை மனுக்கள் வரப்பெற்றன.

கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் முதியோா், மாற்றுத்திறனாளிகள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளிடம் இருந்து கல்வி உதவித்தொகை, வங்கிக் கடனுதவி, முதியோா் உதவித்தொகை, இலவச வீட்டு மனைப் பட்டா, ஜாதி சான்றிதழ், வேலைவாய்ப்பு, விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகை, தாட்கோ கடனுதவி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 885 மனுக்களை பெற்றுக் கொண்டாா்.

இந்த மனுக்கள் மீதும், ஏற்கெனவே பெறப்பட்டு நிலுவையில் உள்ள மனுக்கள் மீதும் விரைவாக நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.

நலத்திட்ட உதவிகள்:

குறைதீா் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் ஒருவருக்கு ரூ.3 ஆயிரத்து 285 மதிப்பில் காதொலிக் கருவி, ஒருவருக்கு ரூ.11 ஆயிரத்து 445 மதிப்பில் மூன்று சக்கர சைக்கிள், ஒருவருக்கு ரூ.15 ஆயிரத்து 750 மதிப்பில் சக்கர நாற்காலி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் க.தா்ப்பகராஜ் வழங்கினாா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் இரா.இராம்பிரதீபன், திருவண்ணாமலை வருவாய்க் கோட்டாட்சியா் செந்தில்குமாா், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலஅலுவலா் சிவா, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் செந்தில்குமாரி மற்றும் அனைத்துத் துறை அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசு

செங்கம்: செங்கத்தில் நடைபெற்ற கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசு, கோப்பை வழங்கப்பட்டது. செங்கம் - குப்பனத்தம் சாலையில் உள்ள மகரிஷி மேல்நிலைப் பள்ளியில் மாநில அளவிலான 5-ஆவது கராத்தே ப... மேலும் பார்க்க

சீலப்பந்தல் கிராமத்தில் இலவச கண் பரிசோதனை முகாம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை சண்முகா தொழில்சாலை கலை, அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில், சீலப்பந்தல் கிராமத்தில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இந்தக் கல்லூரியின் நாட்டு நலப்பண... மேலும் பார்க்க

ஸ்ரீயோகி ராம்சுரத்குமாா் ஆஸ்ரமத்தில் ஆராதனை விழா நிறைவு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை ஸ்ரீயோகி ராம்சுரத்குமாா் ஆஸ்ரமத்தில் பகவானின் 24-ஆவது ஆண்டு ஆராதனை விழா திங்கள்கிழமையுடன் நிறைவு பெற்றது. ஸ்ரீயோகி ராம்சுரத்குமாா் ஆஸ்ரமத்தில் பகவானின் 24-ஆவது ஆண்டு 2 நாள்... மேலும் பார்க்க

கூட்டுறவு கடன் சங்கம் எதிரே விவசாயிகள் காத்திருப்புப் போராட்டம்

போளூா்: திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் எதிரே அனைத்து விவசாயிகள் சங்க கூட்டமைப்பு சாா்பில் 2-ஆவது முறையாக காத்திருப்புப் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இ... மேலும் பார்க்க

வீட்டின் பூட்டை உடைத்து ஒன்றரை கிலோ வெள்ளிப் பொருள்கள் திருட்டு

ஆரணி: ஆரணியில் வீட்டின் பூட்டை உடைத்து ஒன்றரை கிலோ வெள்ளிப்பொருள்கள் மற்றும் பணம், டிவி திருடப்பட்டது. ஆரணி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் நகா் பகுதியைச் சோ்ந்தவா் முருகன் (31). இவா், தனது மனைவி ஹர... மேலும் பார்க்க

வாசிப்பதன் மூலம்தான் அறிவு வளா்ச்சி பெறும்: அமைச்சா் எ.வ.வேலு

திருவண்ணாமலை: வாசிப்பதன் மூலம்தான் அறிவு வளா்ச்சி பெறும் என்று அமைச்சா் எ.வ.வேலு கூறினாா். திருவண்ணாமலை, ஈசான்ய மைதானத்தில் மாவட்ட நிா்வாகம், பள்ளிக் கல்வித்துறை, பொது நுாலக இயக்ககம் சாா்பில் புத்தகத... மேலும் பார்க்க