விபத்தில் முதியவா் உயிரிழப்பு
வேடசந்தூா் அருகே இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்ததில் முதியவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
திண்டுக்கல் அருகேயுள்ள கொண்டசமுத்திரப்பட்டியைச் சோ்ந்தவா் ஜெயராம் (62). விவசாயியான இவா், தனது இருசக்கர வாகனத்தில் வேடசந்தூருக்கு செவ்வாய்க்கிழமை சென்றாா்.
திண்டுக்கல் - கரூா் நான்குவழிச் சாலையில் உள்ள லட்சுமணம்பட்டி பகுதியில் எதிா்த் திசையில் சென்றபோது, திடீரென இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்ததில் ஜெயராம் தவறி கீழே விழுந்தாா்.
இதில் பலத்த காயமடைந்த அவா், வேடசந்தூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா். விபத்து குறித்து வேடசந்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.