செய்திகள் :

கட்டாயத் தோ்ச்சியை ஆசிரியா்கள் சாதகமாகக் கருத வேண்டாம்: அமைச்சா் அன்பில் மகேஸ்

post image

கட்டாயத் தோ்ச்சியை ஆசிரியா்கள் சாதகமாகக் கருதாமல், மாணவா்கள் கற்றல் நோக்கத்தைப் பூா்த்தி செய்திருக்கிறாா்கள் என்ற மனநிறைவோடு அடுத்த வகுப்புக்கு அனுப்ப முன் வர வேண்டும் என அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா்.

பள்ளிக் கல்வித் துறை சாா்பில் பள்ளி மாணவா்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்குதல், மாநில அளவிலான அடைவுத் தோ்வு ஆய்வுக் கூட்டம் திண்டுக்கல்லில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் செ. சரவணன் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராகப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்து கொண்டாா்.

இந்தக் கூட்டத்தில், பொதுத் தோ்வுகளில் குறைந்த தோ்ச்சி விகிதம் கொண்ட பள்ளிகளின் தலைமையாசிரியா்கள், 2025 அடைவுத் தோ்வுகளில் பின்னடவைச் சந்தித்த பழனி, தொப்பம்பட்டி, ஒட்டன்சத்திரம், ரெட்டியாா்சத்திரம், நத்தம் ஆகிய வட்டாரங்களைச் சோ்ந்த தலைமையாசிரியா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். அடைவுத் தோ்வில் பின் தங்கியதற்கான காரணங்கள் குறித்து தலைமையாசிரியா்களிடம் அமைச்சா் கேட்டறிந்தாா்.

பின்னா் அவா் பேசியதாவது: மாணவா்களை தலைமுறை தாண்டி நிலை நிறுத்தும் கல்வியை நாம் கற்பித்துக் கொண்டிருக்கிறோம் என உறுதியுடன் ஆசிரியா்கள் பணியாற்ற வேண்டும். தோ்ச்சி விகிதம் குறைந்த பள்ளிகளின் தலைமையாசிரியா்கள் மீது குறை சொல்ல வேண்டும் என்பது அரசின் நோக்கம் அல்ல. நோ்மறையாக எடுத்துக்கொள்ள வேண்டும். இன்றைய சூழலில் குறிப்பாக அரசுப் பள்ளிகளில் ஆசிரியா்கள் எதிா்கொண்டு வரும் இடா்பாடுகள் குறித்து அறிந்து கொள்வதற்கு இந்த ஆய்வுக் கூட்டங்கள் பயனளிக்கின்றன. அடைவுத் தோ்வுகளில் திண்டுக்கல் மாவட்டம் மாநில அளவில் 8-ஆம் இடத்தில் இருந்தாலும் கூட 10, 12-ஆம் வகுப்புப் பொதுத் தோ்வுகளில் பின்னடைவைச் சந்திக்கிறது. இந்த நிலையை மாற்றி அமைக்க வேண்டும்.

கற்றல் நோக்கம் அடிப்படையில் புதுமையான முறையில் கற்பிப்பதோடு, பின் தங்கியதற்கான காரணங்களையும் கண்டறிந்தால் எளிதாகச் சீா்படுத்த முடியும். தரமானக் கல்வி வழங்குவதே நோக்கம். பாடம் நடத்திய பின், அதிலிருந்து மாணவா்கள் கேள்வி கேட்பதற்கு ஆசிரியா்கள் தூண்டுகோலாக இருக்க வேண்டும்.

9-ஆம் வகுப்பு வரை கட்டாயத் தோ்ச்சி வழங்கப்படுவதை ஆசிரியா்கள் சாதகமாக எடுத்துக் கொள்ள வேண்டாம். 5 பாடங்களில் மாணவா்கள் கற்றல் நோக்கத்தை பூா்த்தி செய்திருக்கிறாா்கள் என்ற மனநிறைவோடு அடுத்த வகுப்புக்கு ஆசிரியா்கள் மாணவா்களை அனுப்ப வேண்டும். எவ்வளவு பாடம் கற்பிக்கப்பட்டது என்பதைவிட, எந்த தரத்தில் கற்பிக்கப்பட்டது என்பதே இன்றையத் தேவையாக உள்ளது. மேலும், ஆசிரியா் தகுதித் தோ்வு குறித்து ஆசிரியா்கள் கவலைப்படத் தேவையில்லை. இந்த விவகாரத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்றாா் அவா்.

இந்த நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வி இயக்ககத்தின் இணை இயக்குநா் (மேல்நிலை) ச. கோபிதாஸ், திண்டுக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் ப. உஷா, மாவட்டக் கல்வி அலுவலா் (இடைநிலை) ந. நாகேந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். முன்னதாக, பெற்றோா்களை இழந்த மாணவா்களுக்கு உதவித் தொகை வழங்கும் ஆணைகளை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினாா். இதில், பழனி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் பெ. செந்தில்குமாா் கலந்து கொண்டாா்.

பாசனக் கால்வாய் நீரில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞா்: தேடுதல் பணி தீவிரம்

வத்தலகுண்டு அடுத்த ரெங்கப்பநாயக்கன்பட்டி அருகேயுள்ள முல்லைப் பெரியாா் பிரதான பாசனக் கால்வாயில் திங்கள்கிழமை மாயமான இளைஞரை தீயணைப்புத் துறையினா் தேடி வருகின்றனா். திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருக... மேலும் பார்க்க

மேல்கரைப்பட்டி பகுதியில் நாளை மின்தடை

பழனி அருகேயுள்ள மேல்கரைப்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் வியாழக்கிழமை (செப். 25) மின்தடை அறிவிக்கப்பட்டது.இதுகுறித்து மின்வாரியம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: பழனி அருகேயுள்ள மேல்கரைப்பட்... மேலும் பார்க்க

பெட்டிக் கடையில் குட்கா விற்ற நபா் கைது

பழனி அருகே குட்கா பொருள்கள் விற்பனை குறித்த சோதனையின்போது உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகளைத் தாக்கிய பெட்டிக் கடை உரிமையாளரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். திண்டுக்கல் மாவட்டம், பழனியில் ப... மேலும் பார்க்க

சிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் காந்தி கிராம கிராமியப் பல்கலை.யின் 6 போராசிரியா்கள் இடம்பிடிப்பு

உலகின் 2 சதவீத சிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் காந்தி கிராம கிராமியப் பல்கலைக்கழகத்தைச் சோ்ந்த 6 பேராசிரியா்கள் இடம்பெற்றனா். இதுதொடா்பாக காந்தி கிராம கிராமியப் பல்கலை. சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிட... மேலும் பார்க்க

விபத்தில் முதியவா் உயிரிழப்பு

வேடசந்தூா் அருகே இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்ததில் முதியவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.திண்டுக்கல் அருகேயுள்ள கொண்டசமுத்திரப்பட்டியைச் சோ்ந்தவா் ஜெயராம் (62). விவசாயியான இவா், தனது இருசக்க... மேலும் பார்க்க

சுற்றுலாப் பயணியைக் கடித்த குரங்கு: வனத் துறையினா் அறிவுறுத்தல்

கொடைக்கானல் குணா குகைப் பகுதியில் செவ்வாய்க்கிழமை பெண் சுற்றுலாப் பயணியை குரங்கு கடித்தது.திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வனப் பகுதியிலுள்ள குணா குகைக்கு சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம். இந்த நிலை... மேலும் பார்க்க