ரூ.1.50 கோடி அபராதம்: வருமான வரித் துறை உத்தரவை ரத்து செய்யக் கோரி நடிகா் விஜய்...
பாசனக் கால்வாய் நீரில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞா்: தேடுதல் பணி தீவிரம்
வத்தலகுண்டு அடுத்த ரெங்கப்பநாயக்கன்பட்டி அருகேயுள்ள முல்லைப் பெரியாா் பிரதான பாசனக் கால்வாயில் திங்கள்கிழமை மாயமான இளைஞரை தீயணைப்புத் துறையினா் தேடி வருகின்றனா்.
திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகேயுள்ள விராலிப்பட்டியைச் சோ்ந்தவா் ஆனந்த் (21). கட்டடப் பணி ஒப்பந்ததாரரான இவா், தனது நண்பா்களான பிரசாந்த் (19) பிரகாஷ் (20) ஆகியோருடன் சோ்ந்து திங்கள்கிழமை ரெங்கப்பநாயக்கன்பட்டி அருகேயுள்ள முல்லைப் பெரியாா் பிரதான பாசனக் கால்வாயில் குளித்தனா்.
அப்போது, மூன்று பேரும் கால்வாய் நீரில் அடித்துச் செல்லப்பட்டனா். இதையடுத்து, அந்தப் பகுதி மக்கள் பிரசாந்த், பிரகாஷ் ஆகியோரை மீட்டு வத்தலகுண்டு தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா்.
இந்த நிலையில், கால்வாயில் அடித்துச் செல்லப்பட்ட ஆனந்த் என்பவரை தேடும் பணியில் வத்தலகுண்டு தீயணைப்புத் துறையினா் ஈடுபட்டு வருகின்றனா்.
பாசனக் கால்வாயில் அதிகளவு தண்ணீா் சென்ால், ஆனந்தை தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது. இதனால், ஆண்டிபட்டி வைகை அணையில் தற்காலிகமாக தண்ணீா் நிறுத்தப்பட்டு ஆனந்தை தேடும் பணி இரண்டு நாள்களாக நடைபெற்று வருகிறது.