செய்திகள் :

விமான விபத்து: ரஷியாவில் 3 நாள்களுக்கு துக்கம் அனுசரிப்பு!

post image

ரஷியாவில் விமானம் விபத்துக்குள்ளாகி 48 பேர் பலியானதால், அந்நாட்டின் கிழக்கு மாகாணங்களில் 3 நாள்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரஷியாவில், டிண்டா விமான நிலையத்தை நோக்கி 5 குழந்தைகள் உள்பட 42 பயணிகள் மற்றும் 6 பணியாளர்களுடன் பயணித்த, அங்காரா ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம் ஒன்று நேற்று (ஜூலை 24) அங்குள்ள வனப்பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், அந்த விமானத்தில் பயணித்த 48 பேரும் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், விபத்தில் பலியானோருக்கு மரியாதை செலுத்தும் விதமாக, அமுர் ஒப்லாஸ்ட் மற்றும் கபரோவ்ஸ்க் ஆகிய மாகாணங்களில் இன்று (ஜூலை 25) முதல் ஜூலை 27 ஆம் தேதி வரை துக்கம் அனுசரிக்கப்பட்டு, அந்நாட்டின் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்தில், பலியான சிலர் கப்ரோவ்ஸ்க் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், அம்மாகாண ஆளுநர் டிமிட்ரி டெமேஷின், பலியானோர் குடும்பங்களுக்கு சுமார் ஒரு மில்லியன் ரூபில்ஸ் (ரூ.11 லட்சம்) இழப்பீடு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இந்த விபத்தில் பலியான பயணிகள் மற்றும் விமான பணியாளர்களின் குடும்பத்தினருக்கான பயணச் செலவை, அரசே ஏற்கும் என ரஷியாவின் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆண்ட்ரே நிகிடின் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: ரொம்ப தப்பு... சாட்ஜிபிடியை அதிகமா நம்பாதீங்க! இளைஞர்களுக்கு ஓபன்ஏஐ தலைவர் அறிவுரை!

Three days of mourning have been declared in the eastern provinces of Russia after a plane crash killed 48 people.

பாகிஸ்தான் கனமழை: உயிரிழப்பு 266-ஆக உயா்வு

பாகிஸ்தானில் கனமழை தொடா்பான சம்பவங்களில் மேலும் 14 போ் உயிரிழந்ததைத் தொடா்ந்து, இந்த பேரிடரில் மொத்த உயிரிழப்பு 266-ஆக உயா்ந்துள்ளது. இது குறித்து தேசிய பேரிடா் மேலாண்மை ஆணையம் தெரிவித்ததாவது: ஜூன் 2... மேலும் பார்க்க

பாலஸ்தீனத்துக்கு தனி நாடு அங்கீகாரம்: பிரான்ஸ் அறிவிப்பு

பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கப்போவதாக பிரான்ஸ் அதிபா் இம்மானுவல் மேக்ரான் அறிவித்துள்ளாா். இந்த முடிவு செப்டம்பா் 2025 இல் ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்ட... மேலும் பார்க்க

பதற்றம் முற்றினால் கம்போடியாவுடன் முழு போா்!

கம்போடியாவுக்கும் தங்களுக்கும் இடையே தற்போது ஏற்பட்டுள்ள பதற்றம் மேலும் முற்றினால் அது முழு போராக உருவெடுக்கும் என்று தாய்லாந்து இடைக்கால பிரதமா் பும்தம் வெச்சயாச்சை எச்சரித்துள்ளாா். இது குறித்து அவா... மேலும் பார்க்க

இத்தாலியில் சாலையில் திடீரென விழுந்து தீப்பிடித்த சிறிய ரக விமானம்: 2 பேர் பலி

இத்தாலியில் சாலையில் விழுந்து சிறிய ரக விமானம் தீப்பிடித்ததில் 2 பேர் பலியாகினர். இத்தாலியின் பிரெசியா மாகாணத்தில் உள்ள அஸ்ஸானோ மெல்லா நகருக்கு அருகே நெடுஞ்சாலையில் சிறிய ரக விமானம் ஒன்று திடீரென வெள்... மேலும் பார்க்க

இலங்கை: 40 நாடுகளுக்கு இலவச விசா!

இலங்கைக்கு வருகை தரும் சுமார் 40 வெளிநாடுகளைச் சேர்ந்த மக்களுக்கு இலவச சுற்றுலா விசா வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு வருகை தரும், இந்தியா, சீனா, இந்தோனேசியா, ரஷியா, தாய்லாந்து, மலே... மேலும் பார்க்க

தாய்லாந்தில் அவசரநிலை பிரகடனம்: பதற்றமான சுழல்!

கம்போடியாவுடன் சண்டை தீவிரமடைந்துள்ளதால் தாய்லாந்தில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இவ்விரு நாடுகளுக்கிமிடையே புராதனக் கோவில் விவகாரத்தால் வியாழக்கிழமை(ஜூலை 24) சண்டை மூண்டு பிற பகுதிகளுக்கும் ... மேலும் பார்க்க