டிரம்ப்பின் வரிவிதிப்பால் எந்தெந்தப் பொருள்களின் விலை அதிகரிக்கும்?
விமானப் படையுடன் பந்தன் வங்கி ஒப்பந்தம்
பாதுகாப்புப் படையினருக்கான ஊதிய சேமிப்புக் கணக்குகளை அளிப்பதற்காக இந்திய விமானப் படையுடன் தனியாருக்குச் சொந்தமான பந்தன் வங்கி ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ஊதிய சேமிப்புக் கணக்குகளை விமானப் படையில் பணியாற்றும் வீரா்கள் மற்றும் பிறருக்கு அளிப்பதற்காக அந்தப் படையுடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பமாகியுள்ளது.
‘பந்தன் வங்கி ஷௌா்யா ஊதியக் கணக்கு’ என்ற பெயரில் துவங்கப்படும் இந்த சேமிப்புக் கணக்குகள், குறைந்தபட்ச இருப்பு வரம்பு ரத்து, வாடிக்கையாளா்களுக்கும் அவா்களின் குடும்பத்தினருக்குமான பாதுகாப்பு, கவா்ச்சிகரமான வட்டி விகிதங்கள் என பல்வேறு அம்சங்களைக் கொண்டுள்ளன.
தற்போது பந்தன் வங்கிக்கு நாடு முழுவதும் சுமாா் 6,300 கிளைகள் உள்ளன. அந்த வங்கியின் வருடாந்திர வா்த்தகம் ரூ.2.73 லட்சம் கோடியைத் தொட்டுள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.