செய்திகள் :

வியட்நாமின் வின்ஃபாஸ்ட். தூத்துக்குடியில் கமிங் ஃபாஸ்ட்! டெல்லி பாரத் மொபிலிட்டி ஷோவில் ட்ரெய்லர்

post image

பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 கூப்பிடு தூரத்தில் வந்துவிட்டது. ஜனவரி 17 துவங்கி 22 வரை நடக்க இருக்கும் இந்த கண்காட்சியில் வியட்நாம் நாட்டைச் சேர்ந்த வின்ஃபாஸ்ட், தனது காம்பேக்ட் மினி எஸ்யூவியான VF 3, மூன்று வரிசைகள் கொண்ட வாகனமான VF 9 உட்பட பல வாகனங்களைக் காட்சிப்படுத்த இருக்கிறது. இருசக்கர வாகனங்களுக்கு நம் நாட்டில் இருக்கும் டிமாண்டை கணக்கில் எடுத்திருக்கும் வின்ஃபாஸ்ட், இன்னொருபக்கம் நவீன தொழில்நுட்பம் கொண்ட மின்சார ஸ்கூட்டர்களையும் காட்சிக்கு வைக்க இருக்கிறது. கடந்த ஆண்டு அமெரிக்காவில் அதிர்வலைகளைக் கிளப்பிய வின்ஃபாஸ்ட்டின் பிக்-அப் வாகனமான VG Wild, வின்ஃபாஸ்ட் அரங்கின் நடுநாயகமாக மக்களைக் கவர இருக்கிறது.

உலகெங்கும் தன் சிறகுகளை விரித்து வரும் வின்ஃபாஸ்ட் நம் நாட்டுக்கு ஃபாஸ்ட்டாக வருவதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. நம் நாட்டில், மின்சார வாகனங்களுக்கான சந்தை வேகமாக வளர்ந்து வருகிறது. புகையை வெளியேற்றாத மாசில்லாத வாகனங்களுக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. நடுத்தர வர்க்கத்தினரின் தேவை, மின்சார வாகனங்களுக்கு அரசு அளிக்கும் மானியம் போன்றவையும் வின்ஃபாஸ்ட், வெகு ஃபாஸ்ட்டாக நம் நாட்டுக்கு வர காரணமாக அமைந்திருக்கிறது.

நம் நாட்டின் மின்சார வாகனங்களுக்கான தேவையைப் பூர்த்தி செய்ய, வின்ஃபாஸ்ட் அதி நவீன தொழில்நுட்பம் கொண்ட கார் தொழிற்சாலையை தூத்துக்குடியில் நிர்மாணித்து வருகிறது.
தனது முகவர்கள், அரசு அதிகாரிகள், அனைத்துக்கும் மேலாக தனது வாடிக்கையாளர்கள் ஆகியோர், தன் மின்சார வாகனங்களை ஒரு சேர காண்பதற்கு வசதியாக, வின்ஃபாஸ்ட் பாரத் மொபிலிட்டி ஷோவை பயன்படுத்திக்கொள்ள இருக்கிறது. வாடிக்கையாளர்களின் தேர்வுகள், விருப்பங்கள் ஆகியவற்றைக் கண்டறிந்து தனது வாகனங்களை அவர்களுக்கு ஏற்ப மேம்படுத்துவதற்கும் வின்ஃபாஸ்ட் இந்தக் கண்காட்சியைப்  பயன்படுத்திக் கொள்ள இருக்கிறது.

அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய நாடுகள், தெற்காசிய நாடுகள், வளைகுடா நாடுகள் போன்றவற்றில் வின்ஃபாஸ்ட் தன் வாகனங்களை ஏற்கனவே விற்பனை செய்வதால், அந்த அனுபவம் அதற்கு நிச்சயம் இந்தியாவிலும் கைகொடுக்கும் என அது உறுதியாக நம்புகிறது.

தரமான பிரீமியம் வாகனங்களை விற்பனை செய்தால் மட்டும் போதாது, பரவலாக சர்வீஸ் மையங்களும் தேவை என்பதை உணர்ந்து அவற்றை அமைப்பதற்கான வேலையிலும் அது கவனம் செலுத்தி வருகிறது.

வாடிக்கையாளர்கள் வேகமாக மின்சார வாகனங்களுக்கு மாறவும், வாகனங்களால் ஏற்படும் மாசுவைக் கட்டுப்படுத்த இந்தியா நிர்ணயித்திருக்கும் இலக்குகளை எட்டுவதற்கும் ஏதுவாக வின்ஃபாஸ்ட்டின் மின்சார வாகனங்கள் நிச்சயம் உதவும். 

Electric Vehicle: 2024-ல் எலெக்ட்ரிக் டூவீலர் விற்பனை 33.8% அதிகரிப்பு

எலெக்ட்ரிக் டூவீலருக்கான வரவேற்பு கடந்த வருடம் இந்தியாவில் அதிகரித்து வருவதை ஆண்டின் இறுதியில் வெளியாகும் சேல்ஸ் சார்ட் காட்டுகிறது.ஓலா, பஜாஜ், டிவிஎஸ், ஏத்தர் நிறுவனங்கள் எலெக்ட்ரிக் டூவீலர் விற்பனைய... மேலும் பார்க்க