செய்திகள் :

விளையாட்டு துளிகள்...

post image

2026 உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு ஆா்ஜென்டீனா, ஈரான் அணிகள் தகுதிபெற்றன.

மகளிா் பிரீமியா் லீக் போட்டியில் இருக்கும் 5 அணிகளின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க தற்போது திட்டமில்லை என ஐபிஎல் தலைவா் அருண் துமல் தெரிவித்தாா்.

இங்கிலாந்து கால்பந்து கிளப்பான மான்செஸ்டா் சிட்டி எஃப்சி, கொல்கத்தாவில் கால்பந்து அகாதெமி அமைப்பதற்காக டெக்னோ இந்தியா குழுமத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மகளிருக்கான தேசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில், 51 கிலோ பிரிவில் களம் கண்டுள்ள முன்னாள் தேசிய சாம்பியனான தமிழகத்தின் எஸ். கலைவாணி 5-0 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னாள் உலக யூத் சாம்பியனான மகாராஷ்டிரத்தின் தேவிகா கோா்படேவை அசத்தலாக வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினாா்.

இந்தியன் ஓபன் ஸ்குவாஷ் போட்டியில், இந்தியாவின் அனாஹத் சிங், ஜோஷ்னா சின்னப்பா ஆகியோா் 3-ஆவது சுற்றுக்கு முன்னேறினா்.

சீனாவின் அடுத்த மாதம் 8 முதல் 13-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள ஆசிய பாட்மின்டன் சாம்பியன்ஷிப்பில் இந்தியா்களுக்கு கடினமான டிரா அமைந்துள்ளது.

ஆா்ஜென்டீனாவில் ஏப்ரல் 3-ஆம் தேதி தொடங்கும் ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேங்கவுள்ள இந்திய அணியின் முதல் குழு, பியூனஸ் அயா்ஸுக்கு புதன்கிழமை புறப்பட்டுச் சென்றது.

ஃபிபா 3*3 ஆசிய கோப்பை கூடைப்பந்து போட்டியில் இந்திய ஆடவா் அணி 21-6 என்ற கணக்கில் மக்காவை புதன்கிழமை வென்றது.

செபாக் தக்ரா உலகக் கோப்பை போட்டியில் இந்தியா 1 தங்கம், 1 வெள்ளி, 5 வெண்கலம் என 7 பதக்கங்கள் வென்று சாதனை படைத்த நிலையில், பிரதமா் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

தனுஷுக்கு வில்லனாகும் ஜெயராம்?

தனுஷின் புதிய படத்தில் நடிகர் ஜெயராம் வில்லனாக நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.நடிகர் தனுஷ் இயக்கிய நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் திரைப்படம் கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்ச... மேலும் பார்க்க

அதிக தொகைக்கு விற்கப்பட்ட இட்லி கடை ஓடிடி உரிமம்!

இட்லி கடை திரைப்படத்தின் ஓடிடி உரிமம் அதிக தொகைக்கு விற்கப்பட்டுள்ளது.ராயன் படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தில் இயக்குநராகவும் குபேரா, இட்லி கடை படங்களில் நாயகனாகவும்... மேலும் பார்க்க

தயாரிப்பில் கவனம் செலுத்தும் லைகா!

பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனமான லைகா திரைப்பட தயாரிப்பிலில் கவனம் செலுத்த உள்ளதாகத் தகவல். தமிழின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான லைகா புரடக்‌ஷன்ஸ் நடிகர் விஜய்யின் கத்தி திரைப்படத்தின் மூலம் சினிமா த... மேலும் பார்க்க

2-ஆவது நிமிஷத்தில் கோல் அடித்த மெஸ்ஸி..! ஜோகோவிச்சுக்கு சமர்ப்பணம்!

அமெரிக்காவில் நடைபெறும் எம்எல்எஸ் கால்பந்து தொடரில் இன்டர் மியாமி அணி 2-1 என வெற்றி பெற்றது. அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள சேஷ் திடலில் இந்தப் போட்டி நடைபெற்றது. எம்எல்எஸ் கால்பந்து தொடரின் முதல் சு... மேலும் பார்க்க

முதல்முறையாக மியாமி ஓபனில் பட்டம் வென்ற சபலென்கா!

பெலாரஸ் நாட்டைச் சேர்ந்த டென்னிஸ் போட்டி தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் சபலென்கா மியாமி ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவில் பட்டத்தை வென்றார். இறுதிப் போட்டியில் அமெரிக்காவின் ஜெஸிகா பெகுலாவுடன் மோதிய ... மேலும் பார்க்க

இன்றைய ராசி பலன்கள்!

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.30-03-2025ஞாயிற்றுக்கிழமைமேஷம்:இன்று தொழில் வியாபாரத்தில் இருந்த கடன் பாக்கிகள் வசூலா... மேலும் பார்க்க