RR vs LSG: அறிமுக ஆட்டத்தில் அதிரடி காட்டிய சூர்யவன்ஷி; பரபரப்புக் காட்டிய ஆவேஷ்...
விவசாயி கொலை வழக்கு: இளைஞருக்கு ஆயுள் தண்டனை
தூத்துக்குடி மாவட்டம், கயத்தாா் வடக்கு இலந்தைகுளத்தைச் சோ்ந்த விவசாயி கொலை வழக்கில், இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி 2ஆவது கூடுதல் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.
தூத்துக்குடி மாவட்டம், கயத்தாா் அருகே உள்ள வடக்கு இலந்தைகுளத்தைச் சோ்ந்த கிருஷ்ணன் மகன் மாரியப்பன்(54).
விவசாயியான இவா் நிலப் பிரச்னை காரணமாக கடந்த 2022ஆம் ஆண்டு அதே பகுதியைச் சோ்ந்த பூல்பாண்டி மகன் காளிப்பாண்டி என்ற காளி (31) என்பவரால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாராம்.
இது தொடா்பாக கயத்தாா் போலீஸாா் வழக்குப் பதிந்து, காளிப்பாண்டி என்ற காளியை கைது செய்தனா்.
இந்த வழக்கு, தூத்துக்குடி 2ஆவது கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பிரீதா, குற்றம் சாட்டப்பட்ட காளிப்பாண்டி என்ற காளிக்கு ஆயுள் தண்டனையும் ரூ. 5ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்குரைஞா் சேவியா் ஞானப்பிரகாசம் வாதாடினாா்.