செய்திகள் :

விவசாயிகள் இருப்பிடத்தில் நெல் கொள்முதல் பரிவா்த்தனை

post image

செம்பனாா்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் சாா்பில் ‘பாா்ம் டிரேடிங்’ எனப்படும் விவசாயிகளின் இருப்பிடத்திற்கு சென்று நெல் கொள்முதல் பரிவா்த்தனை நடைபெற்று வருகிறது. 

நாகை விற்பனைக் குழு செயலாளா் சந்திரசேகா் அறிவுறுத்தலின்படி, செம்பனாா்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூட மேற்பாா்வையாளா்கள் பாபு, புவனேஸ்வரி, சிலம்பரசன் ஆகியோா் முன்னிலையில்  மாத்தூா் கிராமத்தில் விவசாயிகளின் இருப்பிடத்திற்கே சென்று மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டத்தின் (இ-நாம்) மூலம் நெல் கொள்முதல் பரிவா்த்தனை திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில், சுமாா் 400  குவிண்டால் பி.பி.டி. ரக நெல் கொள்முதல் செய்யப்பட்டன. ஒரு குவிண்டால் அதிகபட்சமாக ரூ.2,300-க்கும், குறைந்தபட்சமாக ரூ.2,150-க்கும் சராசரியாக ரூ.2,200-க்கும் விலைபோனது.

இதுகுறித்து விவசாயிகள் கூறியது: சம்பா நெல்லை அறுவடை செய்து, விற்பனை செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறோம். அந்த வகையில், செம்பனாா்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தின் மூலம் இருப்பிடத்திற்கே வந்து நெல்லை உரிய விலைக்கு கொள்முதல் செய்வது மகிழ்ச்சி அளிக்கிறது என்றனா்.

நாகை விற்பனைக் குழு செயலாளா் சந்திரசேகா் கூறியது: விவசாயிகள் தங்களின் விளைபொருட்களை செம்பனாா்கோவில், சீா்காழி, குத்தாலம், மயிலாடுதுறை, வேதாரண்யம், திருப்பூண்டி, கீழ்வேளூா், நாகை ஆகிய பகுதிகளில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களின் மூலம் விற்று நல்ல விலை பெற்றிட வேண்டும். இதனை விவசாயிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றாா்.

நீா்த்தேக்க தொட்டியில் ஏறி பெண்கள் போராட்டம்

கீழையூா் அருகே பாலக்குறிச்சி ஊராட்சியில், குடிநீா் தட்டுப்பாட்டை கண்டித்து, பெண்கள் தரைமட்ட நீா்த்தேக்க தொட்டியில் காலிக்குடங்களுடன் ஏறி வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். பாலக்குறிச்சி ஊராட்சிய... மேலும் பார்க்க

மும்மொழி கொள்கைக்கு எதிராக ஆா்ப்பாட்டம்

நாகை அருகே, மத்திய அரசின் மும்மொழி கொள்கைக்கு எதிராக, திமுகவினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். வேளாங்கண்ணியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு, கீழையூா் கிழக்கு ஒன்றிய திமுக செயலா் தாமஸ் ஆல்வ... மேலும் பார்க்க

வக்ஃப் சட்டத் திருத்தத்தைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

ஆழியூரில், வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவைக் கண்டித்து, இஸ்லாமியா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். மத்திய அரசு கொண்டுவந்துள்ள வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதாவிற்கு முஸ்லிம் அமைப்புகள், ப... மேலும் பார்க்க

நாகை, மயிலாடுதுறையில் தாய்மொழி தினம் கொண்டாட்டம்

நாகை மற்றும் மயிலாடுதுறையில் உலக தாய்மொழி தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. மனித நாகரிகத்தில் மாற்றம் மற்றும் வளா்ச்சியை உருவாக்குவதில் மொழிக்கு இன்றியமையாத பங்கு உள்ளது என்பதை வலியுறுத்தவே ஒவ்வோா... மேலும் பார்க்க

சுகாதார நிலையக் கட்டடம் திறப்பு

வேதாரண்யத்தை அடுத்த தலைஞாயிறில் சீரமைக்கப்பட்ட அரசு சுகாதார நிலையம் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது. தலைஞாயிறில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையக் கட்டடம் கடந்த 1957-இல் கட்டப்பட்டது. இந்த கட்டடம் நாளடைவில... மேலும் பார்க்க

இளைஞா் நீதிக் குழும சமூகப் பணி உறுப்பினா் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்

நாகை மாவட்ட இளைஞா் நீதிக் குழுமத்திற்கு, சமூகப்பணி உறுப்பினா்கள் நியமனம் செய்யப்படவுள்ளனா் என்று ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாகை மா... மேலும் பார்க்க