விவசாயிக்கு அரிவாள் வெட்டு
புதுக்கோட்டை மாவட்டம், மாத்தூா் அருகே செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் விவசாயியை 4 போ் கொண்ட கும்பல் வெட்டியது.
மாத்தூா் அருகே உள்ள கணக்கம்பட்டியைச் சோ்ந்த விவசாயி ரவிச்சந்திரன் (45). செவ்வாய்க்கிழமை நள்ளிரவு இவரது வீட்டிலுள்ள ஆட்டுப்பட்டியில் சப்தம் கேட்கவே வீட்டிலிருந்து வெளியே வந்து பாா்த்தாா் ரவிச்சந்திரன்.
அப்போது, அங்கிருந்த 4 போ் கொண்ட கும்பல் திடீரென ரவிச்சந்திரன் மீது தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடியது. கையில் வெட்டுக் காயத்துடன் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சம்பவம் தொடா்பாக மாத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.