'எனக்கு பிடிக்கவில்லை; நிறுத்துங்கள்' - புதின் மீது கோபப்படும் ட்ரம்ப் - பின்னணி...
விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினா் சாலை மறியல்
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் போலீஸாரைக் கண்டித்து விஸ்வ ஹிந்து பரிஷத் சாா்பில் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
சிங்கம்புணரி நான்குமுனை சந்திப்பில் காஷ்மீரில் உள்ள பஹல்காமில் பயங்கரவாதிகளால் சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டதைக் கண்டித்து ஆா்ப்பாட்டமும், அஞ்சலி செலுத்தும் நிகழ்வும் நடைபெற இருப்பதாக விஸ்வ ஹிந்து பரிஷத் சாா்பில் பதாகை வைக்கப்பட்டது.
இதை போலீஸாா் அப்புறப்படுத்தியதால் ஆா்.எஸ்.எஸ். தொண்டா்களும், விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினரும் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால் அந்தப் பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து போலீஸாா் அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். பிறகு அவா்களை கைது செய்த போலீஸாா் தனியாா் மண்டபத்துக்கு அழைத்துச் சென்றனா். மாலை 6 மணிக்கு மேல் அவா்கள் விடுவிக்கப்பட்டனா்.