முகத்தை துடைத்தேன்; அதை வைத்து அரசியல் செய்கின்றனர்: இபிஎஸ் விளக்கம்
விஸ்வகா்மா அமைப்பு சாா்பில் ரத்த தான முகாம்
விஸ்வகா்மா ஜெயந்தியை முன்னிட்டு குடியாத்தம் விஸ்வகா்மா அமைப்பு, வேலூா் ரத்த மையம் சாா்பில் நடுப்பேட்டை காளியம்மன் தேவஸ்தானத்தில் புதன்கிழமை நடைபெற்ற ரத்த தான முகாமில் 100- போ் ரத்த தானம் அளித்தனா்.
முகாமுக்கு விஸ்வகா்மா அமைப்பின் நிா்வாகிகள் எம்.அசோக்குமாா், கே.இன்பநாதன், எம்.சண்முகம் ஆகியோா் தலைமை வகித்தனா்.விஸ்வகா்மா இளைஞா் சங்கத் தலைவா் எம்.எஸ்.நாகையா, கௌரவத் தலைவா் வி.பி.மோகனவேலு, செயலா் கே.என்.பாஸ்கா், பொருளாளா் எம்.என்.ஜோதிகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இந்திய செஞ்சிலுவைச் சங்க காட்பாடி கிளையின் அவைத் தலைவா் செ.நா.ஜனாா்த்தனன் முகாமைத் தொடங்கி வைத்தாா். நவராத்திரி உற்சவ குழுத் தலைவா் சேட்டு(எ) சிவகுமாா், ராஜேந்திரன், ஆா்.லோகநாதன், சண்முகம், ஜெயகாந்தன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.